அவருக்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்க.. இந்திய ரசிகர்களுக்கு ஜெஃப்ரி பாய்காட் பதிலடி.. நடந்தது என்ன?

- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 தொடரின் அங்கமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் 190 ரன்கள் முன்னிலை பெற்றும் கடைசியில் சொதப்பிய இந்தியா கையில் வைத்திருந்த வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது.

அந்த தோல்விக்கு பேட்டிங் துறையில் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் சுமாராக விளையாடியது ஒரு காரணமாக அமைந்தது. அதே போல மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்னின்று அசத்த வேண்டிய ரோஹித் சர்மா சுமாரான கேப்டன்ஷிப் செய்து பேட்டிங்கிலும் சொதப்பியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

சப்போர்ட் பண்ணாதீங்க:
அப்போது சுமார் 37 வயதாகும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் காலங்களை கடந்து தடுமாறுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்தார். குறிப்பாக கடந்த 4 வருடங்களில் சொந்த மண்ணில் வெறும் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ள ரோகித் சர்மா பெரிய ரன்களை அடிக்க மாட்டார் என்றும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன் ஜடேஜா, ராகுல், விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ளதால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிக்க இங்கிலாந்துக்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் டெலிக்ராப் பத்திரிக்கையில் கூறியிருந்தார். அதற்கு வழக்கம் போல இந்திய ரசிகர்கள் அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

- Advertisement -

அதில் ஒரு ரசிகர் ட்விட்டரில் “சார் நான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் என்னுடைய ஹிட்மேன் பெரிய சதமடித்து தனி ஒருவனாக இங்கிலாந்து பவுலர்களை நொறுக்குவார் என்று கணிக்கிறேன். என்ன வயதாகியிருந்தாலும் தற்போதும் அவர் பவுலர்களின் கேரியரை முடிக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளார்” என்று ஃஜெப்ரி பாய்காட்டுக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு காலம் கடந்த ரோகித் சர்மாவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டாம் என்ற வகையில் மீண்டும் அவர் ட்விட்டரில் அந்த இந்திய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: நான் சொல்றேன் அவரு ரொம்ப பெரிய நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.. இந்திய வீரரை பாராட்டிய – இங்கிலாந்து வீரர்

“ரோகித் சர்மாவின் ஆதரவாளர்கள் அவர் ஒரு சூப்பர் பேட்ஸ்மேன் இன்னும் தரமானவர் என்று சொல்லி ஆதரவு கொடுப்பதை நிறுத்த வேண்டும். பொதுவாக யாருமே 36 வயதுக்கு பின் சிறப்பாக முன்னேற மாட்டார்கள். அந்த வயதுக்கு பின் நாம் அனைவருமே ஃபிட்னஸ், வேகம், சிந்தனை சகிப்புத்தன்மை போன்றவற்றில் குறைவோம். அதற்காக ரோஹித் ரன்கள் அடிக்க மாட்டார் என்று அர்த்தமல்ல. தன்னுடைய வயதை எதிர்த்து போராடுவதற்கான அனுபவம் அவரிடம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement