நான் சொல்றேன் அவரு ரொம்ப பெரிய நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.. இந்திய வீரரை பாராட்டிய – இங்கிலாந்து வீரர்

Crawley
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் காரணமாக 396 ரன்கள் சேர்த்து அசத்தியது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலையுடன் தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்றைய மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணியானது 227 ரன்களை குவித்துள்ளது.

அதனால் இந்திய அணியானது இங்கிலாந்து அணியை விட 370 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலையும், ஆறு விக்கெட் எடுத்த பும்ராவையும் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜாக் கிராவ்லி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது : முதல் இன்னிங்சில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. அவர் நம்ப முடியாத ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கைகொடுத்த கில்.. சச்சின், கோலிக்கு பின் அபார சாதனை

நிச்சயம் எதிர்வரும் காலத்தில் இவர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுப்பார் என்று நம்புகிறேன். அதேபோன்று பும்ராவின் பந்துவீச்சும் அபாரமாக இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளங்களில் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு பாராட்டத்தக்கது என ஜாக் கிராவ்லி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement