
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று அங்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வுக்கு முன்னதாக தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடர்களில் பங்கேற்று வரும் வேளையில் அங்கு சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த துலீப் டிராபி தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் பலரும் இந்த முறை ஆஸ்திரேலியா அணி தான் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்றும் இந்தியா இம்முறை ஆஸ்திரேலியா மண்ணில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று பேசி வருகின்றனர்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கிளென் மெக்ராத், கில்க்ரிஸ்ட் ஆகியோர் இந்திய அணி இம்முறை ஆஸ்திரேலிய அணியிடம் டெஸ்ட் தொடரை இழக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் கூறும் இந்த கருத்துக்களுக்கு எல்லாம் பதிலடி நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு வேண்டுகோளை இந்திய அணியில் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் முன்வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவே இந்திய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஒரு கடினமான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நல்ல ஒரு முன்னோட்டமாக இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பதால் இங்கு வெற்றி பெற்று அதே நம்பிக்கையுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய புறப்படும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இந்தியா அங்கு தோற்கும் என்று கூறி வருகின்றனர். அதற்கு ரவி சாஸ்திரி தவிர வேறு யாரும் பதில் சொல்லவில்லை. எனவே ரவிச்சந்திரன் அஸ்வின் நீங்கள் ஸ்மித்துக்கு ஒரு ஸ்பெஷல் பந்தை உருவாக்கி வருவதாக கூற வேண்டும். அப்போதுதான் அவர்களை ஸ்மித்தை முன்கூட்டியே துவக்க ஆட்டக்காரராக அனுப்புவார்கள்.
இதையும் படிங்க : ரோஹித், பும்ராவுக்கு இடமில்லை.. கேப்டனாக தோனி.. தனது ஆல் டைம் கனவு இந்திய அணியை தேர்ந்தெடுத்த கம்பீர்
அப்போது அவர் பும்ராவிடம் இருந்து தப்பிக்க போராட வேண்டிய அவசியம் உருவாகும். எனவே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பதிலடி நீங்கள் தான் வழங்க வேண்டும் என அஸ்வினிடம் சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.