வரலாற்றில் சிறந்து விளங்கிய வீரர்களை வைத்து ரசிகர்களும் வீரர்களும் தங்களுடைய கனவு கிரிக்கெட் அணியை தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் கௌதம் கம்பீர் தம்முடைய கனவு இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
தன்னுடைய கனவு அணியில் முதல் துவக்க வீரராக கௌதம் கம்பீர் தன்னையே தேர்ந்தெடுத்துள்ளார். தமக்கு ஜோடியாக தமது மாநிலத்தைச் சேர்ந்த அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கை அவர் இரண்டாவது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து 3வது இடத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை அவர் தமது அணியில் தேர்வு செய்துள்ளார்.
கனவு அணி:
அதன் பின் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவருடைய அணியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விராட் கோலியை தனது அணியில் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். நாட்டுக்காக ஒன்றாக விளையாடினாலும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் சண்டை போட்ட விராட் கோலியை தமது கனவு அணியில் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் உலகக் கோப்பை நாயகன் என்று வர்ணிக்கப்படும் யுவராஜ் சிங்கை 6வது இடத்தில் தேர்ந்தெடுத்துள்ள கம்பீர் விக்கெட் கீப்பராக ஜாம்பவான் எம்.எஸ். தோனியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து ஸ்பின்னர்களாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே மற்றும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் கம்பீர அணியில் இடம் பிடித்துள்ளனர்.
கம்பீர் லெவன்:
இறுதியாக ஜாம்பவான் ஜஹீர் கான் மற்றும் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற இர்பான் பதான் ஆகிய இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும் அந்த அணியில் அவர் கேப்டனாக யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. அதே போல் ஜாம்பவான் ஆல் ரவுண்டர் கபில் தேவ் அவர் தனது அணியில் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமாகும்.
இதையும் படிங்க: 550 ரன்ஸ் போராட்டம்.. இங்கிலாந்தில் கேரக்டரை காட்டிய ரஹானே.. ஆஸி தொடரில் எடுக்க கம்பீருக்கு சிக்னல்
மேலும் இந்தியாவின் மற்றொரு மகத்தான பவுலராக போற்றப்படும் ஜஸ்ப்ரித் பும்ராவையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அத்துடன் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மனாகவும் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவுக்கும் கம்பீரின் அணியில் இடம் கிடைக்கவில்லை. கெளதம் கம்பீர் ஆல் டைம் இந்திய லெவன்: வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், எம்.எஸ். தோனி (கீப்பர்), அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், இர்பான் பதான், ஜஹீர் கான்



