முதல் போட்டியில் பண்ண இந்த தப்ப இனிமேல் செய்யாதீங்க – விராட் கோலியை எச்சரித்த சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்த வேளையில் இந்திய அணி அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

Cup

- Advertisement -

இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி சிறப்பான துவக்கத்தை பெற்றது.

ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த வேளையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி களம் புகுந்தார். இலக்கு சிறியதாக இருந்தால் நிச்சயம் எளிதாக இந்திய அணி வெற்றி பெறும் என்றும் விராட்கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரி அடித்த கோலி தான் சந்தித்த 4-வது பந்தில் 8 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Kohli

இந்நிலையில் விராட் கோலி இப்படி 8 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவில் விளையாடியதை போன்று நேற்று விராட் கோலி விளையாடினார். ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ளும் போது அவர் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும். அவரது இந்த மோசமான ஷாட் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இனி வரும் போட்டிகளில் இதுபோன்று அவர் விளையாட கூடாது என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணியில் நடந்த இந்த ஒரு சம்பவம் தான் என்னை மிகவும் பாதித்தது – வார்னர் வருத்தம்

விராட் கோலி 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் இந்திய மண்ணில் 96 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் குவித்து சொந்த மண்ணில் 5000 ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு சொந்த மண்ணில் 5000 ரன்களை தொட்ட நான்காவது சர்வதேச வீரராகவும் அவர் தனது பெயரை ஜாம்பவான் பட்டியலில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement