சன் ரைசர்ஸ் அணியில் நடந்த இந்த ஒரு சம்பவம் தான் என்னை மிகவும் பாதித்தது – வார்னர் வருத்தம்

Warner
Advertisement

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் எல்லாம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கு பெற உள்ளார்கள். இந்த மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அதிகபட்ச விலை தொகையான 2 கோடி ரூபாய் பிரிவின் கீழ் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே அதிரடியாக பேட்டிங் செய்யும் தன்மை மற்றும் கேப்டன்ஷிப் அனுபவமுள்ள இவர் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

david

ஹைதெராபாத் வார்னர்:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கடந்த 2015 ஆண்டு முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த டேவிட் வார்னர் கடந்த 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அது மட்டுமல்லாமல் 2014 முதல் 2020 வரை ஹைதராபாத் அணிக்காக ஒவ்வொரு சீசனிலும் அபாரமாக பேட்டிங் செய்து 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

இந்த காலகட்டங்களில் 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்ற அவர் “ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர்” என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து “புட்ட பொம்ம” பாடலுக்கு ஆட்டம் போட்டு ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்வித்து அவர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். ஆனாலும் கடந்த 2021 சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் ரன்கள் குவிக்க தவறிய அவரை பாதியிலேயே கேப்டன் பதவியில் இருந்து அந்த அணி நிர்வாகம் நீக்கியது.

David warner

மனவேதனையில் வார்னர்:
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைய அடுத்த சில போட்டிகளில் ஒரு படி மேலே சென்ற அந்த அணி நிர்வாகம் அவரை விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கி அவமானப்படுத்தியது. இதனால் மனமுடைந்த அவர் தற்போது அந்த அணியில் இருந்து விலகி புதிய அணிக்காக விளையாட தயாராகியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஹைதராபாத் அணி நிர்வாகம் தன்னை நீக்கியது பற்றி டேவிட் வார்னர் கூறியது பின்வருமாறு. “கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் கேப்டன் பதவி இழந்தது என்னை பெரிய அளவில் தாக்கியது. அந்த சமயத்தில் பழைய வழிக்குத் திரும்பி எனது புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். இருப்பினும் அதை பற்றி எந்தக் கருத்தையும் கூறுவதற்கு இல்லை என நான் நம்பினேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

David warner SRH
David warner SRH

இந்தியாவில் கடினம்:
“நீங்கள் இந்திய மண்ணில் டி20 கிரிக்கெட்டில் விளையாடினால் உங்களது உடல் மற்றும் கால்கள் மிகவும் சோர்வடையும். கடந்த வருடம் கூட வெறும் 3 ஓவர்கள் வீசிய பின் மேக்ஸ்வெல் மிகவும் சோர்வடைந்து போனார். 60 – 70 நாட்களுக்குள் வலை பயிற்சியுடன் கூடிய 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழ்நிலையின் போது உடலளவில் உங்களால் தயாராவது முடியாத ஒன்றாகும்” என இது பற்றி மேலும் தெரிவித்த டேவிட் வார்னர் இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த நாடுகளில் விளையாடுவது மிகவும் சவாலான ஒன்று என கூறியுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் முதன்முதலில் ஐபிஎல் போட்டிக்கு வரும்போது அதற்கு தயாராவதற்கு 7 நாட்கள் இருந்தன. நான் 10 நிமிடங்கள் சானாவில் இருப்பேன். பின்னர் டிரெட்மில்லில் ஒரு கிலோமீட்டர் ஓடி அதையே திரும்பத் திரும்பச் செய்வேன். ஒவ்வொரு முறையும் நான் ஐபிஎல்-க்கு செல்லும் போது அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ள டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வழக்கத்துக்கு மாறான கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement