- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவில் பண்ணத விட ஒருபடி மேல.. நிச்சயம் ஜெய்ஸ்வால் அதை செய்து காட்டுவார் – கவாஸ்கர் நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 159 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 101 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான சதத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ஸ்வால் நிச்சயம் இங்கிலாந்தில் இதை செய்வார் : கவாஸ்கர் நம்பிக்கை

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த அவர் ஆஸ்திரேலிய மண்ணிலும் தான் விளையாடிய முதல் போட்டியில் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அதேபோன்று தற்போது முதல் முறையாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் இந்த போட்டியிலும் சதம் அடித்து அசத்தலான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அவர் இந்த இங்கிலாந்து தொடரில் 800 ரன்கள் வரை குவிப்பார் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்தில் மிகவும் ரசித்து பேட்டிங் செய்கிறார். எனவே கடந்த முறை இந்திய மண்ணில் 700 ரன்கள் அடித்ததை விட தற்போது கூடுதலாக ஒரு போட்டி கிடைத்துள்ளதால் 800 ரன்கள் வரை இந்த தொடரில் குவிப்பார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் மிகவும் திறமை வாய்ந்த இளம் வீரராக திகழும் அவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்திருந்தார். தென்னாப்பிரிக்க தொடரில் அவர் சற்று தடுமாறினாலும் அங்கு பேட்டிங்கிற்கு கூடுதல் சாதகம் கிடைக்காது. ஆனால் தற்போது இங்கிலாந்து மண்ணில் அவருடைய பேட்டிங்கிற்கு சாதகம் இருப்பதால் நிச்சயம் இந்த இங்கிலாந்து தொடரில் அவர் அசத்துவார்.

இதையும் படிங்க : உலகின் மிகச்சிறந்த பவுலர் மட்டுமல்ல.. டேஞ்சரான பவுலரும் கூட.. பும்ராவை புகழ்ந்த – மார்க் வுட்

இந்திய அணியின் அடுத்த பிராண்ட் அம்பாசிடராக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாறுவார். அதேபோன்று இந்திய அணியில் உள்ள சுப்மன் கில், கே.எல் ராகுல், ரிஷப் பண் ட் ஆகியோரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அம்பாசிடராக மாறுவார்கள் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -