உலகின் மிகச்சிறந்த பவுலர் மட்டுமல்ல.. டேஞ்சரான பவுலரும் கூட.. பும்ராவை புகழ்ந்த – மார்க் வுட்

Mark Wood
- Advertisement -

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை. ஆனாலும் இந்த தொடரில் நடைபெறும் சில விடயங்களை உற்றுநோக்கி வரும் அவர் வெளிப்படையான கருத்துக்கள் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் பும்ரா தான் : மார்க் வுட்

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவை பாராட்டும் வகையில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்து வீரர்களுக்கு பயம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல என்று பேசியுள்ள மார்க் வுட் கூறுகையில் :

உண்மையிலேயே ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பான பந்துவீச்சாளர். ஏனெனில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஒரு டேஞ்சரான பவுலராக இருந்து வருகிறார். எனவே தான் நேர்மையாக சொல்கிறேன் அவரை எதிர்த்து விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று கிடையாது. ஏனெனில் அவர் பந்துவீச ஓடிவரும் விதத்தை பார்ப்பதை விட அவரது பந்தில் கூடுதல் வேகம் இருக்கும்.

- Advertisement -

உலகின் தலைசிறந்த பவுலராக இருக்கும் அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர். அதனால் அவரை நான் டேஞ்சரான பவுலர் என்று கூறுகிறேன் என மார்க் வுட் கூறியுள்ளார். அவர் கூறியது போன்று : தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வேளையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்திலும் அவர் மேலும் சில விக்கெட்டுகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : 2003இல் விவிஎஸ் லக்ஷ்மன் என்கிட்ட 3 மாசம் பேசாம இருந்தாரு.. இந்திய கேப்டனாக எடுத்த முடிவு பற்றி கங்குலி

அதேபோன்று மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து மண்ணில் பந்துவீச சிரமப்பட்டு வரும் வேளையில் எளிதாக மிக இயல்பாக அற்புதமான பந்துவீச்சை பும்ரா வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலர் பும்ராவை பாராட்டிய வேளையில் தற்போது அந்த அணியில் விளையாடும் முன்னணி வீரரே பும்ராவை பாராட்டியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement