- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித்தும், கோலியும் தொடர்ந்து ஆடணும்னா இதை செய்தே ஆகனும் – சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்த வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக அறிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக 2027 50 ஓவர் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட அவர்கள் இருவருமே விருப்பம் தெரிவித்து காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களது எதிர்காலம் தற்போது நிர்வாகத்தினர் முடிவால் கேள்விக்குறியாகியுள்ளது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இதை செய்யனும் : சுனில் கவாஸ்கர்

ஏனெனில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மா முழுநேர தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். அதேபோன்று ரோகித் சர்மாவும், விராட் கோலி அந்த தொடரில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இருவருமே அடுத்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இன்னும் அடுத்த உலக கோப்பை தொடருக்கு இரண்டு ஆண்டுகள் இருப்பதாலும் அதற்குள் அவர்கள் இருவருமே 40 வயதை எட்டி விடுவார்கள் என்பதனால் அவர்களது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில் அனுபவம் வாய்ந்த இவ்விரு வீரர்களுமே தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் விளையாட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சில அறிவுரைகளை அவருக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது மிகப்பெரியது.

- Advertisement -

இருந்தாலும் அவர்கள் இருவரும் தற்போது தொடர்ந்து தங்களது திறமை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இருப்பார்கள் என்ற சூழல் உருவாகிவிட்டது. எனவே அவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் எதிர்வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் விளையாட வேண்டும். ஏனெனில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத பட்சத்தில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு மேட்ச் பிராக்டிஸ் கிடைக்கும்.

இதையும் படிங்க : இது புரியாம பும்ராவை குறை சொல்லாதீங்க.. இங்கிலாந்தில் 5 போட்டியிலும் ஆடிருந்தா முடிஞ்சுருப்பாரு.. சிராஜ் பேட்டி

எனவே அவர்கள் இருவரும் எவ்வித சலனமும் இன்றி தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் அப்படி விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு நிர்வாகம் வாய்ப்பு வழங்கும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -