இது புரியாம பும்ராவை குறை சொல்லாதீங்க.. இங்கிலாந்தில் 5 போட்டியிலும் ஆடிருந்தா முடிஞ்சுருப்பாரு.. சிராஜ் பேட்டி

Mohammed Siraj 2
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 2025 ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அத்தொடரில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமையால் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக அறிவித்தார். துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அத்தொடரில் இரு அணிகளைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களாலும் 5 போட்டிகளில் முழுமையாக விளையாட முடியவில்லை. அவர்களுக்கு விதிவிலக்காக 5 போட்டிகளிலும் விளையாடிய முகமது சிராஜ் அதிக (23) விக்கெட்டுகள் எடுத்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். குறிப்பாக கடைசிப் போட்டியில் கடைசி நாளில் அவர் இந்தியாவுக்கு மிராக்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது.

- Advertisement -

குறை சொல்லாதீங்க:

அதனால் ஒன்று முழுமையாக விளையாடுங்கள். அல்லது ஓய்வு பெறுங்கள் என்ற சொல்லாத குறையாக ஜஸ்ப்ரித் பும்ராவை இந்தியாவை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் வித்தியாசமாக பந்து வீசும் ஜஸ்ப்ரித் பும்ரா அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் முழுமையாக விளையாட முடியாது என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். எனவே அவரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்று தெரிவிக்கும் சிராஜ் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“வெளியில் உள்ள கருத்துக்கள் பற்றி ஜஸி பாய் கவலைப்பட மாட்டார். அவருடைய பின்புறத்தில் ஏற்பட்ட காயத்துக்காக பெரிய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதனால் கடைசிப் போட்டியில் பவுலிங் செய்திருந்தால் மீண்டும் அவர் கிரிக்கெட்டில் விளையாடுவாரா மாட்டாரா என்பதை யாராலும் சொல்ல உறுதியாக முடியாது. அந்தளவுக்கு அவரது காயம் பிரச்சனைக்குரியது”

- Advertisement -

ரசிகர்கள் புரிஞ்சிக்கோங்க:

“அவருடைய பவுலிங் ஆக்சன் மிகவும் கடினமானது. இந்தியாவுக்கு முக்கிய பவுலரான அவர் ஆசியக் கோப்பை முதல் அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை முக்கிய நேரங்களில் விளையாடுவதற்கு தயாராக இருப்பது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பாக இருக்கிறார் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: போல்டாகி கேட்ச் விட்ட என்னை ஹீரோவாக்கியது அவரோட ஸ்க்ரிப்ட்.. செஞ்சது மட்டுமே என் வேலை.. சிராஜ் ஓப்பன்டாக்

“மற்ற படி தேவைப்படும் போது கண்டிப்பாக அவர் விளையாடுவார். என்னைக் கேட்டால் ஜஸி பாய் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சரியான முடிவை எடுத்தார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நடைபெறும் ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் தொடரில் அவர் மீண்டும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement