இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. விராட், ரோஹித் உள்ளிட்ட சீனியரால் இல்லாமல் அத்தொடரில் களமிறங்கிய இந்தியா படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தனர். ஆனால் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த தலைமையிலான இளம் இந்திய அணி 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது.
அத்தொடரில் அதிக (23) விக்கெட்டுகள் எடுத்த முகமது சிராஜ் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமையால் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை. அப்போதெல்லாம் அபாரமாக செயல்பட்ட சிராஜ் இந்தியாவுக்கு 2 மறக்க முடியாத வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
ஹீரோவாக எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்:
முன்னதாக அத்தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது டெயில் எண்டர்களை வைத்துக்கொண்டு போராடிய ஜடேஜாவுடன் கடைசி விக்கெட்டாக இணைந்த சிராஜ் வெற்றிக்குப் போராடினார். இறுதியில் அவருடைய நடுபேட்டில் பட்ட பந்து தரையில் பட்டு ஸ்டம்ப் மேலே அடித்து இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.
அதே போல கடைசிப் போட்டியில் 4வது நாளில் கொடுத்த கேட்ச்சை சிராஜ் தவற விட்டதைப் பயன்படுத்திய ஹாரி ப்ரூக் சதத்தை அடித்து இந்தியாவுக்கு பயத்தைக் காட்டினார். இருப்பினும் கடைசி நாளில் அதே சிராஜ் நெருப்பாக பவுலிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் அத்தொடரில் தாம் ஹீரோவாக வேண்டும் என்பதை கடவுள் எழுதியதாக சிராஜ் தெரிவித்துள்ளார். அதை செய்தது மட்டுமே தமது வேலையென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
எல்லாம் கடவுள் செயல்:
“லார்ட்ஸில் போல்ட்டானது முதல் ஓவலுக்கு சென்றது வரை அங்கே நான் இருக்க வேண்டும் என்ற ஸ்கிரிப்ட் என் மேலே எழுதப்பட்டது. ஹாரி ப்ரூக் கேட்ச்சை பிடித்த நான் பவுண்டரியில் காலை வைத்தது உட்பட அனைத்தும் என் மேலே எழுதப்பட்டிருந்தது. அன்றைய நாள் காலையில் நான் ஏன் முன்னதாகவே எழ வேண்டும்? எழுந்த பின் இப்போட்டியில் என்னால் வெல்ல முடியும் என்று ஏன் எனக்கு நானே பேப்பரில் எழுதிக்கொள்ள வேண்டும்?”
இதையும் படிங்க: இந்த அரைகுறை வாய்ப்பு எதற்கு? அணியை உருவாக்கிய ரோஹித்தை மொத்தமா வீட்டுக்கு அனுப்பலாமே? சபா கரீம்
“கடைசி நாளில் என்னுடைய கையிலிருந்து நான் நினைத்து போலவே துல்லியமாக பந்து வெளியே வந்தது. இவை அனைத்தும் “போ, இன்று நீ ஹீரோ ஆவதற்காக விளையாடு. ஹீரோவாகு” என்று கடவுள் எழுதினார்” எனக் கூறினார். மொத்தத்தில் கடந்த இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முகமது சிராஜ் பெயரில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



