அதை மட்டும் ஏத்துக்கவே முடியல.. நீங்க 150க்கு ஆல் அவுட்டாகிருந்தா கூட மனசு ஆறிருக்கும்.. கம்பீர் விமர்சனம்

Gautam Gambhir 2.jpeg
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 2023 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

இத்தனைக்கும் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்த போதிலும் ஃபைனலில் இந்திய அணியினர் அதே பழைய பஞ்சாங்க சொதப்பலை வெளிப்படுத்தினார்கள். அதனால் கடந்த 10 வருடங்களை போலவே லீக் சுற்றில் தெறிக்க விட்ட இந்திய அணி நாக் அவுட் சுற்றில் மண்ணை கவ்வியது கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை வேதனையில் ஆழ்த்தியது.

- Advertisement -

கம்பீர் விளாசல்:
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் இந்திய அணியினர் பேட்டிங்கில் கொஞ்சம் கூட அதிரடியாக போராடவில்லை என்று கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சற்று தைரியமாக அதிரடியாக விளையாட முயற்சித்து 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தால் கூட பரவாயில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“எப்போதுமே மிகவும் தைரியமான அணி தான் உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் சொல்வேன். சில நேரங்களில் நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் 11 – 40 ஓவர்கள் என்பது மிகவும் பெரிய இடைவெளியாகும். அங்கே ஏதோ ஒரு சமயத்தில் இந்தியா அதிரடியாக ரிஸ்க் எடுத்து விளையாடியிருக்க வேண்டும். எப்போதும் நான் டாப் 6 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதை நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“ஒருவேளை நீங்கள் அதை பின்பற்றி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 240 ரன்கள் அடித்த நீங்கள் அதை வைத்துக்கொண்டு வெற்றிக்கு போராட முடியாது. பொதுவாக நீங்கள் உலகக் கோப்பை ஃபைனல்களில் போராட முடியாது. ஒன்று நீங்கள் அதிரடியாக விளையாடினால் வெற்றி உங்கள் பக்கம் வரும் இல்லையேல் எதிர்பக்கம் செல்லும். உங்களுடைய அணுகுமுறை ஒன்று 300 அடிக்க வேண்டும் அல்லது 150 க்கு அவுட்டாக வேண்டும் என்பது போல் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: சூரியகுமார் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்க கூடாது.. என்று சொல்வதற்கான 3 காரணங்கள்

“இதுவே ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக இருக்கிறது. ரோகித் சர்மா நான் அவுட்டானாலும் அனைவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அந்த சூழலில் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவார் என்பதால் எஞ்சிய வீரர்கள் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும். ஒரு ஓவரில் 5 சிங்கிள்கள் எடுப்பதும் நேர்மறையான விளையாட்டாகும். ஆனால் நீங்கள் ஒரு ஓவருக்கு 4 – 5 பந்துகளில் ரன்களே எடுக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement