சூரியகுமார் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப் பட்டிருக்க கூடாது.. என்று சொல்வதற்கான 3 காரணங்கள்

Suryakumar-Yadav
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி மீண்டும் அதே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. மேலும் பாண்டியா காயமடைந்த நிலையில் ராகுல் போன்ற இதர முக்கிய வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அதன் காரணமாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் இத்தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அது சரியான முடிவல்ல என்று சொல்வதற்கான சில காரணங்களை பற்றி பார்ப்போம்.
1. சுமாரான சூர்யா: 2023 உலகக் கோப்பை இந்திய அணியில் சுமாராக செயல்பட்ட ஒரே வீரர் என்று சொன்னால் அது சூரியகுமார் என்று சொல்லலாம். அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவருக்கு இந்த புதிய பொறுப்பு எக்ஸ்ட்ரா பாரத்தை ஏற்படுத்தலாம்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை சாதாரண வீரராகவே மட்டுமே அடித்து நொறுக்கிய அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ளார். எனவே கேப்டன்ஷிப் அழுத்தம் ரவீந்திர ஜடேஜா, மயங் அகர்வால் போன்றவர்களைப் போல் அவருடைய சொந்த செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

2. தொலைநோக்கு பார்வை: இது போன்ற சமயங்களில் இப்போதைய நிலைமையை மட்டும் பார்க்காமல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு புதிய கேப்டனை நியமிப்பதே சரியான முடிவாக இருக்கும். ஆனால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள சூரியகுமார் ஏற்கனவே 33 வயதை தொட்டவர் என்பதுடன் உள்ளூர் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாதவராக இருக்கிறார். எனவே மும்பையைச் சேர்ந்தவர் என்பதற்காக தற்காலிகமாக அவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கேப்டனாக நியமித்துள்ளது கண்டிப்பாக சரியான முடிவல்ல.

- Advertisement -

3. காத்திருக்கும் ருதுராஜ்: அது போன்ற சூழ்நிலைகளில் இத்தொடரின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கைக்வாட் நேரடியாக கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் அவருக்கு இருக்கிறது.

இதையும் படிங்க: தப்பு நம்ம பிளேயர்ஸ் மேல இல்ல.. எல்லாத்துக்கும் அது தான் காரணம்.. தோல்வி பற்றி ஹர்பஜன் விமர்சனம்

அது போக ஐபிஎல் தொடரில் தோனி எனும் மகத்தான கேப்டன் தலைமையில் 4 வருடங்கள் விளையாடிய அனுபவமும் அவரிடம் இருக்கிறது. இவை அனைத்தையும் விட கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக இளம் இந்திய அணியை வழி நடத்திய ருதுராஜ் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு முக்கிய பங்காற்றி அனுபவத்தை கொண்டவர். எனவே வருங்காலத்தை கருத்தில் கொண்டு சூரியகுமாரை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது நல்ல முடிவாக இருந்திருக்கலாம்.

Advertisement