
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார். அதனை தொடர்ந்து புதிய பயிற்சியாளருக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரவபூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேர்வில் ஒரு சில நபர்கள் மட்டுமே போட்டியில் இருந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீரே இந்திய அணியின் அடுத்த புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யும் கௌதம் கம்பீரின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அவரே அடுத்த பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி இந்த டி20 உலக கோப்பை முடிந்த பின்னர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கான தற்காலிக பயிற்சியாளராக வி.வி.எஸ் லக்ஷ்மணன் இருப்பார் என்றும் அதன் பின்னரே முறைப்படி கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு தான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் நிச்சயம் ஒரு கண்டிஷன் இருக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளதாகவும் அதன்படி இந்திய அணி இனிமேல் விளையாடப் போகும் மூன்று வித கிரிக்கெட்க்கும் ஒவ்வொரு தனித்தனி அணி உருவாக்கப்படும் என்றும் முதன்மை அணியே எல்லா தொடர்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் இரண்டாம் கட்ட அணி எந்த தடவையும் விளையாடக்கூடாது என்ற நிபந்தனையை விதித்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : எல்லா கண்டிஷன்லயும் தெறிக்க விடுறாரு.. இந்திய அணியில் 2 விராட் கோலி இருக்காங்க.. சோயப் மாலிக் பாராட்டு
டி20 உலக கோப்பை திறக்க முடிந்த பின்னர் இரண்டாம் தர இந்திய அணியே ஜிம்பாப்வே பயணிக்கவுள்ள வேளையில் இனிவரும் தொடர்களில் எல்லாம் முதன்மை வீரர்கள் தான் விளையாட வேண்டும் என கம்பீர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.