எல்லா கண்டிஷன்லயும் தெறிக்க விடுறாரு.. இந்திய அணியில் 2 விராட் கோலி இருக்காங்க.. சோயப் மாலிக் பாராட்டு

Shoaib Malik
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் பேட்டிங்கில் சூரியகுமார் யாதவ் 53, ஹர்டிக் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பந்து வீச்சில் பும்ரா, அரஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்தத் தொடரில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அதே வேகத்தில் தற்போது சூப்பர் 8 சுற்றிலும் அசத்து துவங்கியுள்ள அவர் தொடர்ந்து பந்து வீச்சுத் துறையில் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

2 விராட் கோலி:
இந்நிலையில் பேட்டிங்கில் விராட் கோலி எப்படியோ அதே போல பந்து வீச்சில் பும்ரா அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியாக அசத்தி வருவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் பாராட்டியுள்ளார். அதனால் இந்திய அணி 2 விராட் கோலியுடன் விளையாடுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி கடந்த பல வருடங்களாக நன்றாக செயல்பட்டு இந்தியா போட்டிகளை வெல்வதற்கு உதவி வருகிறார். அதே போல பும்ராவை நான் பந்து வீச்சின் விராட் கோலி என்று சொல்வேன். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் பந்து வீச்சில் அசத்தக்கூடிய அவருடைய பிரத்தியேக திறமையை நாம் பேசி வருகிறோம். புதிய பந்திலும் பழைய பந்திலும் மெதுவாக வீசக்கூடிய திறமை கொண்டுள்ள அவர் முழுமையான பவுலர்”

- Advertisement -

“டி20 மட்டுமின்றி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அவர் அசத்துகிறார். போட்டியின் முடிவில் ரோகித் சர்மா அவரைப் பற்றி புகழ்ந்து பேசினார். மற்ற அணிகளிலும் தொடர்ந்து அசத்தக்கூடிய பவுலர்கள் இருக்கின்றனர். ஆனால் பும்ரா ஐசிசி தொடர்களில் எப்போதும் ஃபார்மை இழந்ததாக தெரியவில்லை. அவர் எப்போதும் ஃபார்மில் இருக்கிறார்”

இதையும் படிங்க: ஒரே பந்தில் ஹிட் விக்கெட் ரன் அவுட்டாகியும்.. பாகிஸ்தான் வீரரை அவுட்டாகாமல் காப்பாற்றிய 31.7 விதிமுறை

“அவர் பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவதில்லை. அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் அவர் அசத்துகிறார்” என்று கூறினார். இது மட்டுமல்லாமல் பும்ரா தற்போது அனைத்து வகையான ஃபார்மட்டிலும் உலகின் சிறந்த பவுலராக திகழ்வதாக ஜாம்பவான் வாசிம் அக்ரமும் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த சூப்பர் 8 போட்டியில் ஜூன் 22ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Advertisement