நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் கிரிக்கெட்டில் அடிப்படை விதிமுறைகளை வைத்தே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. காலத்தின் வளர்ச்சிக்கேற்ப அவ்வப்போது விதிமுறைகளில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுகிறது. இருப்பினும் அந்த விதிமுறையால் சில நேரங்களில் ஆச்சரியமான தீர்ப்புகள் வழங்கப்படுவதும் வழக்கமாகும். அப்போது தான் இப்படியொரு விதிமுறை இருக்கிறது என்பதே பெரும்பாலான புதிய ரசிகர்களுக்கு தெரிய வருவது வாடிக்கையாகும்.
அந்த வரிசையில் தற்போது 31.7 விதிமுறைக்கு எடுத்துக்காட்டாக ரசிகர்களுக்கு ஒரு சிறந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதாவது இங்கிலாந்தில் தற்போது டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று யார்க்ஷைர் மற்றும் லன்க்ஷைர் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஜாக் ப்ளாதர்விக் வீசிய 15வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷான் மசூத் கொஞ்சம் இறங்கி சென்று ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சிதார்.
வினோதமான விதிமுறை:
ஆனால் அதற்காக அதிகமாக இறங்கி சென்று அவருடைய கால் ஸ்டம்ப் மீது பட்டதால் பெய்ல்ஸ் விழுந்தது. அதன் காரணமாக தாம் அவுட்டாகி விட்டோம் என்று கருதியை ஷான் மசூத் ஏமாற்றுத்துடன் வெளியேறு துவங்கினார். இருப்பினும் எதிர்புறம் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஸ்ட்ரைக்கை பெறுவதற்காக இந்த பக்கம் ஓடி வந்தார்.
அதை பார்த்த ஷான் மசூத் அந்த ரன்னை முழுமையாக்குவதற்காக ஓடினார். ஆனால் அதற்குள் எதிரணியினர் பந்தை எடுத்து அவரை ரன் அவுட் செய்தனர். இதற்கிடையே வெள்ளைக்கோட்டுக்கு வெளியே காலை வைத்து பவுலர் வீசியதால் அந்த பந்தை நடுவர் நோபால் என்று அறிவித்தார். ஆனால் நோபாலில் ரன் அவுட் செல்லுபடியாகும் என்பது அடிப்படை விதிமுறையாகும். எனவே அவருக்கு நடுவர் அவுட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் 31.7 விதிமுறைப்படி ஷான் மசூத் அவுட்டில்லை என்று அறிவிக்கப்பட்டது ரசிகர்களையும் எதிரணியையும் ஆச்சரியப்படுத்தியது. அதற்கான காரணம் என்னவெனில் முதலில் ஹிட் விக்கெட்டானதும் தாம் அவுட்டாகி விட்டோம் என்று கருதியே ஷான் மசூத் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். ரன் எடுப்பதற்காக ஓடவில்லை. எனவே தவறான புரிதலால் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறிய அவருக்கு அம்பயர் ரன் அவுட் வழங்கவில்லை.
இதையும் படிங்க: சென்னையில் நடைபெறவிருக்கும் ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டி.. எந்த அணிக்கு எதிராக தெரியுமா? விவரம் இதோ
அதற்கு 31.7 எம்சிசி விதிமுறை பின்வருமாறு. “ஒரு பேட்டர், அவுட் கொடுக்கப்படாத நிலையில் அவுட்டாகி விட்டதாக தவறான எண்ணத்தில் கோட்டை விட்டு வெளியேறினார் என்று நடுவர் திருப்தியடைந்தால் தலையிடுவார். மேலும் ஃபீல்டிங்கின் எந்த நடவடிக்கையும் நடக்காமல் தடுக்க நடுவர் அதை டெட் பால் (காலவாதியான பந்து) என்று சமிக்ஞை செய்து மீண்டும் பேட்டரை விளையாட அழைக்க முடியும்”



