அவரே ஒரு அரைகுறை பிளேயர். அவரை மட்டும் பிளேயிங் லெவன்ல எடுக்காதீங்க – இந்திய வீரர் குறித்து கம்பீர் கருத்து

Gambhir
Advertisement

வரலாற்றில் 16-வது முறையாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த தொடரில் இதுவரை பாகிஸ்தான் அணி நேபாள் அணியையும், இலங்கை அணி பங்களாதேஷ் அணியையும் தோற்கடித்துள்ள வேளையில் இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டி நகரில் நடைபெறவுள்ள இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை எச்சரிக்கும் விதமாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆசிய கோப்பை தொடரில் மட்டுமல்ல எதிர்வரும் 50 உலகக் கோப்பை தொடரிலும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் இந்திய அணி களமிறங்க வேண்டும்.

அதேபோன்று எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வீரர் இருந்தால் பலமாக இருக்கும் என்று கருதி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூரை அணியில் எடுத்தால் அது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகிய மூன்று பவுலர்களுமே 10 ஓவர்கள் முழுவதுமாக வீசி போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறமை கொண்டவர்கள்.

- Advertisement -

ஷர்துல் தாகூரை ஒரு முழுமையான பேட்ஸ்மேனாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு முழுமையான பவுலராகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரை அணியில் இணைக்க கூடாது. நமது அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் பாண்டியா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதினால் தாகூரை அணியில் எடுக்கும் பட்சத்தில் அது நமக்கு தான் பாதகம் என்று பேசியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? – ரோஹித் அளித்த பதில்

மேலும் சேசிங் செய்ய வேண்டிய இலக்கு 250-ஆ அல்லது 320-ஆ என்பதில் தெளிவாக இருங்கள். ஏனென்றால் 8 பேட்ஸ்மேன்களுடன் சென்றால் 325 ரன்களை சேசிங் செய்ய வேண்டியதாக இருக்கும். அது பேட்ஸ்மன்களின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement