
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகினார். தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிப்பதற்காகவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பி.சி.சி.ஐ-யிடம் அவர் தெரிவித்ததால் இந்திய அணியின் நிர்வாகமும் அவரை தொடர்ச்சியாக பயிற்சியாளராக செயல்படும்படி கட்டாயப்படுத்தவில்லை.
அதனை தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அப்படி இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் தனது குழுவில் தனக்கு பிடித்த உதவியாளர்கள் குழுவில் இருக்க வேண்டும் என்று கூறி பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும், பௌலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் பெயரையும் பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார்.
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிசிசிஐயும் கம்பீர் கேட்டுக் கொண்டபடியே அவர்களை பதவியில் அமர்த்தியது. இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் நியமிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து கம்பீர் தனது பழைய பேட்டியில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :
நான் சந்தித்த பந்து வீச்சாளர்களிலேயே மோர்னே மோர்கல் மிகவும் கடினமானவர். அவரது பவுன்சர்களை விளையாடுவது அவ்வளவு எளிது கிடையாது. எனவேதான் நான் அவரை கொல்கத்தா நைட் ரைடர்சனில் விளையாடிய போது அணிக்குள் கொண்டு வந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பிய போதும் அவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மீண்டும் அவரை டெல்லி அணிக்கு அழைத்து வந்தேன்.
அப்படித்தான் அவர் என்னுடன் தொடர்ந்து பயணித்து வந்தார் என்று கம்பீர் கூறியுள்ளார். கம்பீர் கூறிய இந்த கருத்தின் மூலம் தெரிய வருவது யாதெனில் : இப்படி தொடர்ச்சியாக மோர்கல்லை ஆதரித்து வந்ததன் காரணமாகவே கம்பீர் அவரது இந்த நியமனத்திற்கு உதவியுள்ளார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இப்போவும் சந்தேகமா இருக்கு.. நாங்க கேட்கல தோனிக்காக பிசிசிஐ கொடுத்தா தான் உண்டு.. காசி விஸ்வநாதன் பேட்டி
ஏற்கனவே தான் ஐபிஎல் அணிகளில் விளையாடிய போது தனது அணியின் கீழ் பந்துவீச்சாளராக வைத்திருந்த அவரை லக்னோ அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட போதும் மோர்கல்லை பந்துவச்சு பயிற்சியாளராக நியமித்திருந்தார். இப்படி மோர்னே மோர்கல் மீது அதீத நம்பிக்கை வைத்ததாலே அவரை இந்திய அணியின் பந்துவீச்சாளராக கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.