இப்போவும் சந்தேகமா இருக்கு.. நாங்க கேட்கல தோனிக்காக பிசிசிஐ கொடுத்தா தான் உண்டு.. காசி விஸ்வநாதன் பேட்டி

Kasi Viswanathan
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்காக ஐபிஎல் அணி நிர்வாகங்களின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் மெகா ஏலத்துக்கு முன் 4 வீரர்களுக்கு பதிலாக 7 – 8 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதியளிக்குமாறு பிசிசிஐயிடம் பெரும்பாலான அணிகள் கோரிக்கை வைத்தன.

அதே கூட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் “அன்கேப்ட் பிளேயர்” விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்களை தாண்டி விட்டால் அவரை அன்கேப்ட் வீரராக கருதலாம். அதன் அடிப்படையில் அவரை குறைந்தபட்ச விலையான வெறும் 20 லட்சத்திற்கு கூட வைக்க முடியும் என்ற விதிமுறை 2021 வரை இருந்தது.

- Advertisement -

இப்போதும் சந்தேகம்:
எனவே இம்முறை அந்த விதிமுறை பயன்படுத்தி 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்களை கடந்த தோனியை தக்க வைக்க அனுமதியளிக்குமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே கேட்டதாக தெரிய வந்தது. அதற்கு ஹைதெராபாத் போன்ற சில அணி நிர்வாகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிய வந்தது. அந்த நிலையில் தோனிக்காக பிசிசிஐ அந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர உள்ளதாக நேற்று புதிய செய்தி வெளியானது.

குறிப்பாக தோனி விளையாடினால் அதை இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள். அது ஐபிஎல் தொடருக்கும் பிசிசிஐக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் லாபகரமான விஷயமாகும். எனவே தோனிக்காக மீண்டும் அந்த விதிமுறையை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதியானதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அன்கேப்ட் விதிமுறையை தாங்கள் கேட்கவில்லை என சிஎஸ்கே அணியின் இயக்குனர் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் பிசிசிஐ தான் அந்த விதிமுறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னதாக அவர் கூறியுள்ளார். எனவே பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை 2025இல் தோனி விளையாடுவது சந்தேகமே என்றும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. உலக தரமான அவரை யாரும் பாராட்டலன்னு தான் சொன்னேன்.. பென் டக்கெட் பேட்டி

இது பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் காசி விஸ்வநாதன் கூறியது பின்வருமாறு. “அது பற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நாங்கள் அதைக் கேட்கவும் இல்லை. பிசிசிஐ தான் தாமாக வந்து எங்களிடம் அன்கேப்ட் பிளேயர் இருக்கிறது. வேண்டுமானால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அவ்வளவு தான். பிசிசிஐ இன்னும் அதை அறிவிக்கவில்லை. அந்த விதிமுறைகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்” என்று கூறினார்.

Advertisement