தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. உலக தரமான அவரை யாரும் பாராட்டலன்னு தான் சொன்னேன்.. பென் டக்கெட் பேட்டி

Ben Duckkett
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து ஆரம்பத்திலேயே எச்சரித்தது. அதற்கு தகுந்தார் போல் முதல் போட்டியிலேயே வென்ற இங்கிலாந்து முன்னிலையும் பெற்றது.

ஆனால் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய இந்தியா அடுத்த 4 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றது. அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா தங்களை சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்தது. மறுபுறம் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்படாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்த இங்கிலாந்து பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

தவறான புரிதல்:
முன்னதாக அந்தத் தொடரில் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 712 ரன்கள் விளாசி இங்கிலாந்தை தோற்கடிக்க முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜெய்ஸ்வால் மிகவும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தை தெறிக்க விட்டார். ஆனால் அப்போது தங்களுடைய “பஸ்பால்” அணுகுமுறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்தார்.

எனவே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டு தங்களையும் சேரும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு நாசர் ஹுசைன் , மைக்கேல் கிளார்க், ரவி சாஸ்திரி போன்ற ஏராளமான முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தனர். இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த வீரரான ஜெய்ஸ்வாலை யாரும் அதிகம் பாராட்டுவதில்லை என்று தான் தாம் சொன்னதாக பென் டக்கெட் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு விமர்சித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெய்லி மெய்ல் பத்திரிகையில் பேசியது பின்வருமாறு. “உண்மையில் ஜெய்ஸ்வாலுக்கு நான் நல்ல பாராட்டைக் கொடுத்தேன். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்று நான் உறுதியாக சொல்வேன். ஆனால் அவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரைப் பற்றி நான் 5வது டெஸ்ட் போட்டியில் தான் அப்படி சொன்னேனா? இல்லை”

இதையும் படிங்க: ரசிகர்களின் நலனுக்காக இனிமே அந்த போட்டி இந்தியாவில் நடைபெறாது. அதுக்கு வாய்ப்பே இல்ல – ஜெய் ஷா அறிவிப்பு

“ஏனெனில் அவர் தொடர் முழுவதும் அப்படித்தான் நம்ப முடியாத வகையில் அற்புதமாக விளையாடினார்” என்று கூறினார். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement