- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் இதைச்செய்தால் தான் வெற்றிபெற முடியும்.. அதைத்தான் நாங்க செய்யப்போறோம் – கவுதம் கம்பீர் கருத்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் நேற்று மும்பை விமான நிலையத்திலிருந்து இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து புறப்பட்டனர். இதற்கு முனனதாக இந்திய அணியின் கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற இதுதான் அவசியம் : கவுதம் கம்பீர்

அந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்திய அணி இந்த தொடரில் எந்தெந்த வியூகங்களை கடைபிடிக்கப்போகிறது? அணித்தேர்வு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை இருவருமே பகிர்ந்து இருந்தனர். அந்த வகையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பல்வேறு முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பும்ரா 3 டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என்று முன்கூட்டியே சொல்ல முடியாது என்றும் அணியின் வெற்றிக்கு அவர் அவசியம் என்றால் 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோன்று உள்ளூர் போட்டிகளில் கருண் நாயர் தனது திறமையை நிரூபித்துள்ளதால் அவருக்கும் இந்த தொடரானது முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் கருண் நாயருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

அதோடு இந்திய அணியின் பௌலிங் யூனிட் எவ்வாறு இருக்கும் என்று பேசியிருந்த கம்பீர் கூறுகையில் : நீங்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் 1000 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெறுவோம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினால் டெஸ்ட் போட்டியை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. எனவே டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவசியம்.

- Advertisement -

அந்தவகையில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களை இந்த தொடரில் தேர்வுசெய்ய இருக்கிறோம். கண்டிஷனுக்கு எந்த பவுலிங் யூனிட் சரியாக இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் முதன்மை அணியில் பௌலர்கள் இடம் பிடிப்பார்கள்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா எங்கே? ஏர்போர்ட்டில் ரசிகர் கேட்ட கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

குறிப்பாக 5 மைதானங்களிலும் ஐந்து வித கண்டிஷன்கள் இருக்கும் எனவே எத்தனை சுழற்பந்து வீந்துச்சாளர்கள், எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறப்போகிறார்கள் என்பது மைதானத்தின் தன்மையின் அடிப்படையிலும், சூழலில் அடிப்படையிலும் தான் தேர்வு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். எப்போதுமே இங்கிலாந்து சூழலில் இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் தான் இதுவரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -