ரோஹித் சர்மா எங்கே? ஏர்போர்ட்டில் ரசிகர் கேட்ட கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்த ரிஷப் பண்ட் – விவரம் இதோ

Rishabh Pant and Rohit
- Advertisement -

சுப்பன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடர் என்பதனால் இது இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக மாறியுள்ளது.

ரோஹித் சர்மா குறித்த கேள்விக்கு பதிலளித்த ரிஷப் பண்ட் :

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய முதன்மை அணியானது நேற்று மும்பை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து புறப்பட்டது.

- Advertisement -

அதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்ததால் அவர்கள் இருவரும் இன்றி முதல் முறையாக இந்திய அணி வெளிநாட்டு தொடருக்கு பயணித்துள்ளது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்படுவதற்காக இந்திய அணியின் வீரர்கள் அங்கு சென்றிருந்த போது ரிஷப் பண்ட்டை நோக்கி ரசிகர் ஒருவர் ரோகித் சர்மா எங்கே? என கேள்வி எழுப்பினார். ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்று தெரிந்தும் ரசிகர் கேட்ட அந்த கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த ரிஷப் பண்ட் :

- Advertisement -

அவர் தோட்டத்தில் ஜாலியாக ரோமிங் செய்து கொண்டிருக்கிறார். அந்தத் தோட்டத்தை நானும் மிஸ் செய்கிறேன் என சிரித்தபடி பதிலளித்தது கிளம்பினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரர் விராட் கோலி இல்லாமல் பயணம் செய்யும் முதல் தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்த்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விராட் கோலியின் 4 ஆவது இடத்தில் இவர்தான் ஆடனும்.. பிளேயிங் லெவனை வெளியிட்ட – ஆகாஷ் சோப்ரா

இங்கிலாந்து அணிக்கெதிரான இந்திய அணியின் 18 பேர் கொண்ட லிஸ்ட் இதோ : 1) சுப்மன் கில் (கேப்டன்), 2) ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), 3) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4) கே.எல் ராகுல், 5) சாய் சுதர்சன், 6) அபிமன்யு ஈஸ்வரன், 7) கருண் நாயர், 8) நிதீஷ் ரெட்டி, 9) ரவீந்திர ஜடேஜா, 10) துருவ் ஜுரேல், 11) வாஷிங்டன் சுந்தர், 12) ஷர்துல் தாகூர், 13) ஜஸ்ப்ரீத் பும்ரா, 14) முகமது சிராஜ், 15) பிரசித் கிருஷ்ணா, 16) ஆகாஷ் தீப், 17) அர்ஷ்தீப் சிங், 18) குல்தீப் யாதவ்.

Advertisement