என்னாது அன்லக்கியா? அவருக்கு பேட்டிங் செய்ய தெரிலன்னு சொல்லுங்க – விராட் மீது கரிசனம் காட்டிய வகார் யூனிஸ் – தாக்கிய கம்பீர்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடுமையாக போராடி 48.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 266 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ரோகித் சர்மா 11, விராட் கோலி 4, சுப்மன் கில் 10, ஸ்ரேயாஸ் ஐயர் 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தது போலவே சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 66/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று விளையாடிய இஷான் கிசான் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் பாகிஸ்தான் பவுலர் அவர்களுக்கு சவாலை கொடுத்து நிதானமாக விளையாடி சரிவை சரி செய்தனர். அதில் இசான் கிசான் 82 (81) ரன்களும் ஹர்திக் பாண்டியா 87 (90) ரன்களும் எடுத்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய நிலையில் பந்து வீச்சில் மிரட்டிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தார். இருப்பினும் கிரிக்கெட்டில் பொதுவாகவே இன்சைட் எட்ஜ் வாங்கி அவுட்டாவது துரதிஷ்டம் வசமென்று சொல்வார்கள். அந்த வகையில் இப்போட்டியில் விராட் கோலி துரதிஷ்டவசமாக அவுட்டானதாக பாகிஸ்தான் ஜாம்பவான் நேரலையில் பேசியது பின்வருமாறு. “கோலி சற்று துரதிஷ்டவசத்தை தொட்டார். ஏனெனில் இன்சைட் எட்ஜ் வாங்கிய பந்து பேட்டுக்கு சரியாக வராமல் சற்று கீழே சென்றது”

- Advertisement -

“இருப்பினும் அந்தளவுக்கு லென்த்தை குறைத்த ஷாஹீன் அப்ரிடிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் அதே நிகழ்ச்சியில் வர்ணனை செய்த முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் அதை ஏற்றுக் கொள்ளாமல் விராட் கோலி எவ்விதமான ஷாட்டையும் அடிப்பதற்கு முயற்சிக்காமல் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தியதே அவுட்டானதற்கு காரணம் என்று விமர்சித்தார். இது பற்றி அவர் பேசியது பின் வருமாறு. “அதில் எந்த ஷாட்டும் இல்லை. ஏனெனில் அவர் முன்னோக்கி பின்னோக்கி செல்லவில்லை”

இதையும் படிங்க:IND vs PAK : அட என்னடா இது? இப்படி நடந்து போச்சி. யாரும் எதிர்பாரா ட்விஸ்டுடன் முடிந்த – இந்தியா பாகிஸ்தான் போட்டி

“மாறாக மிகவும் சாதாரணமாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அப்படி சாகின் அப்ரிடி போன்றவருக்கு எதிராக நீங்கள் அஜாக்கிரதையாக விளையாடினால் இப்படி தான் அவுட்டாவீர்கள். அந்த சமயத்தில் அவருக்கு முன்னோக்கி செல்வதாக அல்லது பின்னோக்கி செல்வதா என்பது தெரியாமல் இருந்தது” என்று கூறினார். முன்னதாக கடந்த பல வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டாலும் கௌதம் கம்பீர் இப்படி விராட் கோலியை விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக சண்டை போட்ட கெளதம் கம்பீர் இப்படி விமர்சனத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சொல்லலாம்.

Advertisement