விராட் கோலியை பாத்து எப்படி விளையாடனும்னு அவங்க 2 பேரும் கத்துக்கனும் – கவுதம் கம்பீர் ஆவேசம்

Gambhir
Advertisement

சமீப காலமாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தின் மூலம் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அவர் 35 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் நடைபெற்று முடிந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 60 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதேபோன்று இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இரண்டாவது இடத்தில் மூன்று போட்டிகளில் 77 ஆவரேஜுடன் 154 ரன்கள் விராட் கோலி குவித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்து தொடரில் விராட் கோலி விளையாடி வரும் விதம் குறித்து புகழ்ந்து பேசியுள்ள கவுதம் கம்பீர் இளம் வீரர்களை சற்று கண்டித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியிருந்த கம்பீர் கூறுகையில் :

Rishabh Pant

விராட் கோலியின் ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ரோகித் மற்றும் ராகுல் சிறப்பான துவக்கம் கொடுக்க அதன் பின்னர் அனைவருமே நன்றாக விளையாடினார்கள். கோலி பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டத்திற்கு நாம் பாராட்டுகளை கொடுக்க வேண்டியது அவசியம். முதல் இரண்டு போட்டியிலும் பார்மிற்கு திரும்பியதை சுட்டிக்காட்டிய விராட் கோலி மூன்றாவது போட்டியில் அட்டகாசமாக விளையாடி உள்ளார்.

- Advertisement -

இதே பார்மை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவார் என நம்புகிறேன் என்று கம்பீர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சூரியக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : அப்போவே இந்தியாவுக்கு இப்படி நடக்கும்னு சொன்னே யாரு கேட்டீங்க – வெற்றிக்கு பின் பாக் வீரர் கலாய் பேச்சு

ஏனெனில் எப்போதும் உங்களால் பெரிய ஷாட்களை விளையாட முடியாது. விராட் கோலி ஒன்று இரண்டு ரன்கள் ஓடி பெறும் திறன் தான் அவரை பெரிய பிளேயராக இருக்க உதவுகிறது. அவர் ஒரு ரன்னுக்கான இடத்தில் இரண்டு ரன்களை கூட ஓடுவதில் ஆர்வம் காட்டுவார். இப்படி விளையாட கற்றுக் கொள்ளுங்கள் என்று கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement