இளைஞர்களின் வழிகாட்டியான நீங்க இப்டி செய்யலாமா? கபில் தேவ், கவாஸ்கர், சேவாக்கிற்கு கம்பீர் முக்கிய கோரிக்கை – நடந்தது என்ன

Gautam Gambhir.jpeg
- Advertisement -

உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் சினிமாவில் நடிக்கும் நடிகர்களை சாதாரண மனிதர்களாக பார்க்காமல் ஹீரோக்களாக பார்க்கும் ரசிகர்கள் அவர்களுக்காக எதையும் செய்வதற்கு தயாராக இருப்பது உண்மையாகவே முன்னேற்றத்தை தடுக்க கூடியது என்று சொல்லலாம். அதே போல இந்தியாவில் சினிமாவுக்கு நிகராக விளையாட்டுத்துறையில் குறிப்பாக கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நட்சத்திரம் அந்தஸ்தை பெறும் வீரர்களை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

SUnil Gavaskar Kapil Dev

- Advertisement -

குறிப்பாக ஆரம்ப காலங்களில் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த இந்தியாவில் 1983 உலக கோப்பையை வென்று ஆழமாக வேரூன்ற செய்த கபில் தேவ் அப்போதிலிருந்து சச்சின் போன்ற பல தரமான இளம் வீரர்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல் 80களில் வெறித்தனமாக பந்து வீசி மண்டையை பதம் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை ஹெல்மெட் போடாமலேயே மிகச்சிறப்பாக எதிர்கொண்டு உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் என்ற மாபெரும் மைல்கள் சாதனையை படைத்த சுனில் கவாஸ்கர் பேட்டிங் துறையின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுக்கு ரோல் மாடலாக இப்போதும் திகழ்கிறார்

கம்பீர் கோரிக்கை:
அதே போலவே சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, விரேந்தர் சேவாக் என 90களில் அசத்திய வீரர்கள் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் ஹீரோக்களாக இன்றும் கொண்டாடப்படுகிறார்கள். மேலும் தற்போதைய நவீன கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் சூப்பர் ஸ்டார்களாக போற்றப்படுகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஜாம்பவான்களாக போற்றப்படும் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் பிரபல புகையிலை நிறுவனத்தின் பொருளை பிரபலப்படுத்தும் வகையில் அதை வாயில் உண்பது போன்ற விளம்பரத்தில் நடித்திருந்தனர்.

Sehwag Sachin

குறிப்பாக பல கோடி ரூபாய் தருகிறார்கள் என்பதற்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்களை பின்பற்றுகிறார்கள் என்பதை மறந்தும் அவர்கள் அவ்வாறு நடித்தது சிலரை அதிருப்தியில் ஆழ்த்தியது. அந்த வரிசையில் ஜாம்பவான்களாக இருக்கும் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா என்று ஆதங்கத்தை வெளிப்படுத்த கௌதம் கம்பீர் 20 கோடி கொடுத்தும் ஒருமுறை புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது அருவருப்பானது மற்றும் ஏமாற்றமளிக்க கூடியது. அதனால் தான் உங்களுடைய ரோல் மாடல்களை கவனத்துடன் தேர்ந்தெடுங்கள் என்று நான் சொல்வேன். மேலும் அவர்கள் பெயருக்காக புகழைப் பெறவில்லை மாறாக கடினமாக உழைத்து புகழை பெற்றுள்ளோம் என்பதை மறக்கக்கூடாது. ஏனெனில் நீங்கள் செய்வதை கோடிக்கணக்கான குழந்தைகள் பார்க்கின்றனர். புகையிலைப் பொருள் விளம்பரத்திற்காக கிடைக்கும் பணம் முக்கியமல்ல. 2018ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நான் விலகிய போது 3 கோடியை நான் கொடுக்க வேண்டியிருந்தது”

Gambhir

“ஒருவேளை தொடர்ந்து விளையாடினால் அது எனக்கு கிடைத்திருக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும் என்று நம்பிய நான் விலகினேன். மேலும் ஒருமுறை சச்சின் டெண்டுல்கருக்கு அது போன்ற விளம்பரத்தில் நடிக்க 20 – 30 கோடி ரூபாயுடன் அழைப்பு வந்தது. ஆனால் அது போன்ற புகையிலை பொருட்கள் விளம்பரத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். ஏனெனில் பல கோடி ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் தாம் அது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று தம்முடைய தந்தைக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அஷ்வின் போன்று வேறுயெந்த வீரரும் இந்த அளவிற்கு மோசமாக நடத்தப்படவில்லை – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

அவர் கூறுவது போல 90களில் வில்ஸ் நிறுவனத்துக்கு விளம்பரத்தில் நடிக்க பல கோடி ரூபாய் அழைப்பு வந்த போதிலும் அதை தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் மறுத்து விட்டதாக மே 31ஆம் தேதி நடைபெற்ற புகையிலை ஒழிப்பு தினத்தன்று சச்சின் தெரிவித்திருந்தார். சொல்லப்போனால் ஐபிஎல் 2023 தொடரில் பல கோடி குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சியில் கம்பீர் – விராட் கோலி சண்டை போட்டது சரியல்ல என்று விமர்சித்த சேவாக் மற்றும் கவாஸ்கர் இப்படி செய்தது ரசிகர்களுக்கே ஆச்சரியமாகும்.

Advertisement