நம்பிக்கை இல்லைனா ஏன் அவர செலக்ட் பண்ணீங்க? இந்திய அணியை விமர்சித்த கம்பீர், வாசிம் அக்ரம்

Gautam Gambhir 3
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றதால் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வெல்வோம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக ஃபைனலில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த முடியாமல் சொந்த மண்ணில் வீழ்ந்தது.

முன்னதாக இத்தொடரில் ரோஹித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களுமே உச்சகட்ட ஃபார்மில் அபாரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே திண்டாடி வரும் சூரியகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டு ஃபைனலில் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

ஏன் செலக்ட் பண்ணீங்க:
குறிப்பாக எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கக்கூடிய பேட்டிங்கை வெளிப்படுத்தாத அவர் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து சிங்கிள்களை மாற்றி முடிந்தளவுக்கு அதிக ரன்களை சேர்க்காமல் கடைசியில் மோசமாக அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. இந்நிலையில் மாபெரும் ஃபைனலில் சூரியகுமாருக்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டது ஏன் என்று கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவேளை சூரியகுமார் திறமை மீது நம்பிக்கை இல்லலையெனில் அவரை ஏன் தேர்வு செய்தீர்கள் என்றும் விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சூரியகுமாரை 7வது இடத்தில் களமிறக்கியது கண்டிப்பாக சரியான முடிவல்ல. அதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. குறிப்பாக விராட் கோலி அவுட்டான பின் கேஎல் ராகுல் நிதானமாக விளையாடினார்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் உங்களுக்குப் பின் ரவீந்திர ஜடேஜா காத்திருப்பதால் அடுத்ததாக சென்று அதிரடியாக விளையாடுங்கள் என்று சொல்லி சூர்யகுமாரை நீங்கள் களமிறங்க செய்திருக்க வேண்டும். இங்கே சூரியகுமார் சொதப்பினர் என்று சொல்வது எளிது. ஆனால் அப்போது நமக்கு பின் பும்ரா, ஷமி, குல்தீப் போன்ற பவுலர்கள் மட்டுமே இருப்பதால் கவனமாக விளையாட வேண்டும் என்ற மனநிலைக்கு சூரியகுமார் தள்ளப்பட்டார். ஒருவேளை அவர் 6வது இடத்தில் விளையாடுவதற்கான தன்னம்பிக்கை உங்களிடம் இல்லாமல் போனால் வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஃபைனலில் அந்த 2 பவுலர்களையும் தப்பா யூஸ் பண்ணிடீங்க.. ரோஹித் தவறை சுட்டிக்காட்டிய வாசிம் அக்ரம்

அதே நிகழ்ச்சியில் வாசிம் அக்ரம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடினார். ஒருவேளை 4 ஓவர்கள் மட்டும் இருந்து பாண்டியா எதிர்ப்புறத்தில் இருந்தால் நீங்கள் ஜடேஜாவை அனுப்பியிருக்கலாம். இருப்பினும் சூரியகுமார் அடிக்க முடியாத அளவுக்கு 80 – 90% பந்துகளை ஸ்லோ பவுன்சர்களாக வீசிய ஆஸ்திரேலியா கேப்டனுக்கு நீங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement