சென்னை டூ கொழுப்பு எதுவும் மாறல.. நீங்க எப்போ தான் திருந்துவீங்க? வென்றும் விராட் – ராகுலை கடுமையாக விமர்சித்த கெளதம் கம்பீர்

Gautam gambhir 10
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இலங்கையை அவருடைய சொந்த மண்ணில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 49.1 ஓவரில் 213 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக 20 வயது இளம் வீரர் துணித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதை தொடர்ந்து 214 ரன்களை துரத்திய இலங்கை ஆரம்பம் முதலே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 41.3 ஓவரில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக பேட்டிங்கிலும் அசத்திய வெல்லாலகே 42* ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
இந்த வெற்றியால் ஆசிய கோப்பை தொடரின் ஃபைனலுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய 5 இலங்கையின் வெறும் 20 வயது இடதுகை ஸ்பின்னரான வெல்லாலகேவின் சுழலில் சுமாராக செயல்பட்டதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். குறிப்பாக கடந்த பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற போட்டியில் ஆடம் ஜாம்பா, அஸ்டன் அகர் போன்ற இடது கை ஸ்பின்னர்களிடம் திண்டாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் முன்னேறவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் விக்கெட்டை பரிசாக கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இது வாடிக்கையாகி விட்டது. சென்னையில் நடைபெற்ற போட்டியில் பந்து லேசாக பிடித்து வந்த போது ஆடம் ஜாம்பா, அஸ்டன் அகர் போன்ற ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தியா 269 ரன்களை கூட சேசிங் செய்யாததை மறந்துவிடாதீர்கள்”

- Advertisement -

“அதாவது பந்து சற்று க்ரிப் ஆகி வரும் போது நாம் அதிகமாகவே தடுமாறுகிறோம். இது 350 ரன்கள் அடிக்கும் பிட்ச் கிடையாது 270 ரன்கள் எடுக்கக் கூடியதாகும். அதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் 40 ஓவரில் 160 – 170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தால் தங்களுடைய ஆட்டத்தை அட்ஜஸ்ட் செய்வது முக்கியமாகும். அது போன்ற நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு சிறந்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்”

இதையும் படிங்க: IND vs SL : இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இப்படி பண்றது இதுவே முதல் முறையாம் – வரலாற்று சாதனை

“குறிப்பாக கில் ஒரு சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா வேகத்தால் வீழ்த்தப்பட்டார். ஆனால் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மிகவும் அஜாக்கிரதையாக விளையாடி எளிதாக அவுட்டானார்கள். எனவே இது போன்ற சூழ்நிலைகளில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் நீங்கள் இன்னும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள்” என்று கூறினார். முன்னதாக கடந்து 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டும் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுலை அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement