IND vs SL : இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி இப்படி பண்றது இதுவே முதல் முறையாம் – வரலாற்று சாதனை

SL
Advertisement

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியானது நேற்று கொழும்பு நகரில் படு சுவாரசியமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தலாம் என்ற முனைப்புடன் இந்திய அணியும், இந்திய அணியை வீழ்த்தி முன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணியும் மோதியது.

இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினையும் பெற்றிருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் அடித்தது.

- Advertisement -

பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முறையாக இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் அனைத்து (10) விக்கெட்டுகளையும் இலங்கை அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இலங்கை அணி இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து வீழ்த்தியது இதுவே முதல் முறை.

இதையும் படிங்க : கும்ப்ளே, ஹர்பஜன், அஷ்வின் என யாரும் படைக்காத சாதனையை படைத்து அசத்திய – குல்தீப் யாதவ் (விவரம் இதோ)

இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா நான்கு விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement