- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நெவர் சரண்டர்.. வெல்டன் பாய்ஸ்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய பிறகு – கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியான பதிவு

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய அணி பெற்ற வெற்றியை பாராட்டிய : கவுதம் கம்பீர்

அதனை தொடர்ந்து லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்யும் என்கிற அழுத்தத்தில் களமிறங்கியது. ஆனால் இந்த ஐந்தாவது போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.

- Advertisement -

இதன் மூலம் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரையும் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியுள்ளது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பல்வேறு தரப்பிலும் இருந்தும் பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் இந்திய அணி இந்த தொடரை சமன் செய்தது குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் கவுதம் கம்பீர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : “சில போட்டிகளில் நாம் வெற்றி பெறலாம்”, “சில போட்டிகளில் நாம் தோல்வியையும் சந்திக்கலாம்”. ஆனால் எப்போதுமே சரணடைய மாட்டோம். “வெல்டன் பாய்ஸ்” என்று இந்திய அணியின் வீரர்களின் இந்த அசாத்தியமான செயல்பாட்டை பாராட்டி கௌதம் கம்பீர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கௌதம் கம்பீரின் தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வந்தது. இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளுக்கு என தனியாக பயிற்சியாளரை கொண்டு வரலாம் என்று ஒரு பேச்சும் இருந்து வந்தது.

இதையும் படிங்க : கேட்டதை கொடுத்துட்டேன்.. டேல் ஸ்டைனுக்கு பதிலளித்த ஜடேஜா.. ரொனால்டோவின் நம்பு புகைப்படம் காட்டி நெகிழ்ச்சி

இவ்வேளையில் தற்போது இந்த தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளதன் மூலம் கவுதம் கம்பீர் நிச்சயம் நிம்மதி அடைந்திருப்பார். ஒருவேளை இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தால் கௌதம் கம்பீர் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -