கேட்டதை கொடுத்துட்டேன்.. டேல் ஸ்டைனுக்கு பதிலளித்த ஜடேஜா.. ரொனால்டோவின் நம்பு புகைப்படம் காட்டி நெகிழ்ச்சி

- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் கண்டிப்பாக இந்திய அணி தோல்வியை சந்திக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இருப்பினும் கடைசி நாளில் அனலாக பவுலிங் செய்த இந்தியா மேற்கொண்டு 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்தது. குறிப்பாக முஹமது சிராஜ் மட்டும் 3 விக்கெட்டுகள் எடுத்து மொத்தமாக 9 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் முதல் முறையாக ஒரு போட்டியில் 10க்கும் குறைவான ரன்னுக்குள் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

ரோனால்டோவின் நம்பு வாசகம்:

அந்த வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக அந்தப் போட்டியில் ஹாரி ப்ரூக் கேட்ச்சை பிடித்த முகமது சிராஜ் பவுண்டரி எல்லையில் காலை வைத்ததால் சிக்ஸராக மாறியது. அதைப் பயன்படுத்தி இந்தியாவை அடித்து நொறுக்கிய ப்ரூக் 111 (98) ரன்கள் விளாசி கிட்டத்தட்ட தோல்வியை பரிசளித்தார்.

இருப்பினும் அதற்காக அசராத சிராஜ் பந்து வீச்சில் கில்லியாக செயல்பட்டு சரித்திர வெற்றிக்கு வித்திட்டார். அதைப்பற்றி போட்டி முடிவில் கேட்ட போது “5வது நாள் காலையில் தம்மால் முடியும்” என்று நம்பியதாக சிராஜ் கூறினார். அதற்காக கூகுளில் நம்பு என்ற வாசகம் அடங்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கொண்டாடும் புகைப்படத்தையும் டவுன்லோட் செய்து மொபைலில் வைத்ததாகவும் சிராஜ் தெரிவித்தார்.

- Advertisement -

ஸ்டைனுக்கு நெகிழ்ச்சி பதில்:

அந்தப் புகைப்படத்தை காட்டுமாறு செய்தியாளர்கள் சிராஜிடம் கேட்டனர். அதற்கு சற்றும் யோசிக்காத சிராஜ் தம்முடைய மொபைலில் 7 நம்பர் ஜெர்ஸியுடன் ரொனால்டோ கொண்டாடும் நம்பு என்ற வாசகம் கொண்ட புகைப்படத்தை காண்பித்தார். இது போக ஓவல் போட்டியில் சிராஜ் 5 விக்கெட்டுகளை எடுப்பார் என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் ஆரம்பத்திலேயே ட்விட்டரில் கணித்திருந்தார்.

இதையும் படிங்க: சுந்தரின் ஒற்றை இடி தான் இந்தியாவை காப்பாத்துச்சு.. ஓவல் வெற்றியில் கருப்பு குதிரையாக ஓடிய தமிழன்.. மாஸ் விவரம்

அதை நிஜமாக்கிய சிராஜ் தற்போது. “நீங்கள் கேட்டீர்கள் நான் கொடுத்துள்ளேன். என்னைப் பற்றி இது போன்ற கணிப்பு உங்களிடமிருந்து வந்ததற்கு மகிழ்ச்சி” என ஸ்டைனுக்கு நெகிழ்ச்சியான பதிலைக் கொடுத்துள்ளார். மொத்தத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாமல் 2021 காபாவை போல சிராஜ் தலைமையில் இந்தியா மற்றுமொரு சரித்திர வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement