- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் ஸ்கூல் படிக்கும்போதே அப்படித்தான் – கெத்தான பள்ளி வாழ்க்கை கதையை பகிர்ந்த கெளதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார திறமையால் இந்தியாவிற்காக பல வெற்றிகளைத் தேடி கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக இந்தியா வென்ற 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை ஆகிய தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிகளில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவர் முறையே 75 மற்றும் 97 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக திகழ்ந்தார்.

அதேபோல் டெஸ்ட் போட்டிகளிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவர் ஒரு கட்டத்தில் உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேனாகவும் ஜொலித்தார். மேலும் ஐபிஎல் தொடரிலும் அபாரமாக பேட்டிங் செய்த அவர் ஒரு கேப்டனாகவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தி 2 சாம்பியன் பட்டத்தை வென்று காட்டினார்.

- Advertisement -

சண்டைக்கோழி கெளதம் கம்பீர்:
மொத்தத்தில் இந்தியாவுக்கும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி அனைத்து வாய்ப்புகளிலும் அபாரமாக செயல்பட்டு தனக்கென ஒரு முத்திரை பதித்த கெளதம் கம்பீர் ஒரு சாம்பியன் கிரிக்கெட்டர் என்று பாராட்டினால் மிகையாகாது. அந்த அளவுக்கு திறமை வாய்ந்த அவர் எப்போதுமே சூதாட்டம் என்பது போன்ற சர்ச்சைகளில் சிக்கியதே கிடையாது.

ஆனால் களத்தில் விளையாடும்போது எதிரணி வீரர்களிடமும் தனது நாட்டை சேர்ந்த வீரர்களிடமும் சண்டையிட்டு நிறைய முறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக பரம எதிரியான பாகிஸ்தானை சேர்ந்த சாகித் அப்ரிடி, கம்ரான் அக்மல் போன்ற வீரர்களுடன் அவர் போட்ட சண்டை வரலாற்றில் அழிக்க முடியாத ஒன்றாகும். அதைவிட கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலியுடன் அவர் போட்ட சண்டை ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாததாகும். மொத்தத்தில் கிரிக்கெட் களத்தில் கௌதம் கம்பீர் ஒரு சண்டக்கோழியை போல சண்ட செய்பவராக அறியப்படுகிறார்.

- Advertisement -

கெத்தான பள்ளிவாழ்க்கை:
இந்நிலையில் தமது பள்ளி வாழ்க்கையிலேயே சக மாணவர்களுடன் இது போன்ற நிறைய சண்டைகளில் ஈடுபட்டுள்ளதாக கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். இதுபற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது பள்ளி பருவத்தில் நிறைய சண்டைகளில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக 12-ம் வகுப்பு படிக்கும் போது அனைத்து மாணவர்களும் கடைசி நாள் வரை பள்ளி செல்ல விரும்பினார்கள். ஆனால் நான் ரஞ்சி கோப்பையில் விளையாடியதன் காரணமாக 2 மாதங்கள் பள்ளி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்.

அதன் பின் நேரடியாக இறுதித் தேர்வில் கலந்துகொண்டேன். இதுபோன்ற எனது நடவடிக்கைகள் காரணமாக எங்களது பள்ளியில் எனக்கு கொடுக்கப் பட்டிருந்த “ஃப்ர்பெக்ட்” எனும் முத்திரையை என்னிடமிருந்து பறித்தார்கள். அதேபோல் “மாயோ” எனும் கல்லூரியில் நடக்கும் ஐடிஎஸ்சி தொடரில் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் டிபிஎஸ் அணியினருடன் கடும் சண்டை இட்டேன்” என கூறினார்.

- Advertisement -

இத்தனை நாள் கிரிக்கெட் களத்தில் மட்டுமே கௌதம் கம்பீர் சண்டையிட்டு வந்தார் என பார்த்தால் பள்ளிப் பருவத்திலும் அதைவிட பெரிய சண்டைகளிலும் ரகளையிலும் ஈடுபட்டதை இப்போதுதான் அறிய முடிகிறது. இதிலிருந்து சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் சூர்யாவை போல பள்ளிப் பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் கௌதம் கம்பீர் சக மாணவர்களுடன் சண்டையில் ஈடுபட்டு கெத்தாக வளர்ந்தது தெரியவருகிறது.

சண்டை செய்த கம்பீர்:
“மிகவும் தவறு என்று இப்போது உணர்ந்த இன்னொரு விஷயத்தை அப்போது நாங்கள் செய்தோம். ஏனெனில் இளம் பருவத்தில் அனைவருமே உற்சாகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நாங்கள் தங்கியிருந்த ஓமன் மாளிகையில் அந்த வீடு யாருடைய பெயரில் கட்டப்பட்டதோ அந்த நபர் ஓமனில் இருந்து தனது பிரம்மாண்ட உருவப் படத்தைக் கொண்டு வந்திருந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில் அந்த இடத்தில் நாங்கள் கூர்முனை மற்றும் ஷூ ஆகியவற்றை கொண்டு கடுமையாக சண்டை போட்டுக் கொண்டதால் அந்த உருவப்படம் சேதமானது.

- Advertisement -

அதன் காரணமாக அந்த வீட்டின் தலைமை ஆசிரியர் அழ ஆரம்பித்துவிட்டார்” என இது பற்றி மேலும் தெரிவித்த கௌதம் கம்பீர் தனது ஆரம்ப கால வாழ்க்கையில் ஈடுபட்ட மிகப்பெரிய சண்டைகளை பற்றி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இம்முறை ருதுராஜ் கெய்க்வாடுடன் ஓப்பனரா விளையாட போறது இவர்தானா? – சி.எஸ்.கே நிர்வாகம் பதிவு

இந்தியாவுக்காக உலகக்கோப்பைகள், 10000 ரன்கள் என பல சாதனைகள் படைத்து இன்று ஒரு ஜாம்பவனாக கருதப்படும் கௌதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் தற்போது லக்னோ அணிக்கு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட இவ்வளவு பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள அவர் ஆரம்ப காலங்களில் இவ்வளவு மோசமான சண்டைகளில் ஈடுபட்டது உண்மையாகவே அனைவரையும் ஆச்சரியமடைய வைக்கிறது.

- Advertisement -
Published by