இம்முறை ருதுராஜ் கெய்க்வாடுடன் ஓப்பனரா விளையாட போறது இவர்தானா? – சி.எஸ்.கே நிர்வாகம் பதிவு

Ruturaj
Ruturaj Gaikwad
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது அடுத்த வாரம் மார்ச் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்க்கப்படும் ஐபிஎல் தொடரானது இன்னும் ஒருசில நாட்களில் துவங்க இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முழு சீசனும் இந்தியாவில் நடைபெற இருப்பது கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் சீசனுக்கான பயிற்சியில் அனைத்து அணிகளும் தற்போது மும்முரம் காட்டி வருகின்றன.

CSK-2

- Advertisement -

மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணி முன்னதாக சூரத் நகருக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இந்த ஆண்டும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

இருப்பினும் அவர்களை தவிர்த்து மற்ற சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாள்தோறும் இப்படி சிஎஸ்கே வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறுகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

அந்த வகையில் இந்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட்டுடன் யார் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில் தற்போது சிஎஸ்கே அணி வெளியிட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் இந்த ஆண்டு துவக்க வீரராக கெய்க்வாட்டுடன் யார் களமிறங்கப்போவது என்கிற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே ஆகியோர் பயிற்சிக்கு தயாராகும் ஒரு புகைப்படம் சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒன்றாகவே பயிற்சியை மேற்கொள்வதால் நிச்சயம் இந்த சீசனில் இந்த ஜோதியே துவக்க ஜோடியாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு டி20 உலககோப்பையில் விளையாடுவேன் பாருங்க – இந்திய வீரர் சவால்

ஏனெனில் டூபிளெஸ்ஸிஸ்சை ஏலத்தில் எடுக்காத சென்னை அணியானது அவருக்கு பதிலாக இடதுகை துவக்க வீரராக காண்வேவை தேர்வு செய்துள்ளதால் நிச்சயம் ருதுராஜுடன் இவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement