ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு டி20 உலககோப்பையில் விளையாடுவேன் பாருங்க – இந்திய வீரர் சவால்

ind
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லலாத டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இந்த வருடம் தீவிரமாகப் போராட உள்ளன.

ipl trophy

- Advertisement -

காத்திருக்கும் வீரர்கள்:
இந்த தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை போலவே இதில் பங்கேற்கும் வீரர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று கூறலாம். ஏனெனில் ஐபிஎல் போன்ற ஒரு மிகப்பெரிய தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு அதை வைத்து தாய் நாட்டுக்காக விளையாடுவதற்கான வாய்ப்பை பிடிக்க அனைத்து வீரர்களும் முழு மூச்சுடன் முயற்சி செய்ய உள்ளனர்.

அந்த வகையில் தற்போது 37 வயதை கடந்துள்ள இந்திய அனுபவ வீரர் ஷிகர் தவான் இந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 உலக கோப்பை வருகிறது. எனவே ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் என்னால் விளையாட முடியும் என எனக்கு தெரியும்.

dhawan

முறுக்கு மீசை ஷிகர் தவான்:
அதற்கான வேலைகளில் ஈடுபடுவேன் என்றாலும் அதற்காக எந்த விதமான இலக்கையும் நான் வைத்துக்கொள்ளவில்லை. ஏனெனில் நேரம் இருக்கும் வரை நான் கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாட விரும்புகிறேன். மன நிலைமை, உடல் நிலைமை என அனைத்து வகைகளிலும் விரும்பி விளையாடும் நினைக்கிறேன். முதலில் நான் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட வேண்டும். அதில் அசத்தினால் கண்டிப்பாக உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிப்பேன். இருப்பினும் இந்திய அணியில் இடம் பிடிப்பேனா, மாட்டேனா என்பதை பற்றி காலம்தான் பதில் சொல்லும். அதற்காக எனது மனநிலையை பாதிப்படைய வைக்க நான் விரும்பவில்லை” என கூறினார்.

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய ஷிகர் தவான் அதன்பின் கடந்த பல வருடங்களாக இந்திய வெள்ளைப் பந்து அணியின் நிரந்தர தொடக்க வீரராக இருந்து வந்தார். இருப்பினும் சமீப காலங்களாக இந்திய டி20 அணியில் பெரிய அளவிலான ரன்களை குவிக்க தடுமாறிய அவர் தற்போது ஒருநாள் அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

Dhawan-1

மேலும் கேஎல் ராகுல், இஷான் கிசான், ருத்ராஜ் கைக்வாட் என போட்டியாக டி20 உலக கோப்பையில் விளையாட நிறைய வீரர்கள் வந்து விட்டதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பையில் இடம் பிடிப்பேன் என ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுவாகவே சிரித்த முகத்துடன் மீசையை முறுக்கும் அவர் இதற்காக பதற்றம் அடையாமல் வழக்கம் போல முயற்சி செய்ய உள்ளதாக கூறியுள்ளார். கடந்த வருடங்களில் டெல்லி அணிக்காக அபாரமாக விளையாடிய அவர் இந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கழற்றிவிட்ட டெல்லி:
“இப்போது டெஸ்ட் மற்றும் டி20 இந்திய அணியில் நான் விளையாடுவதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதனால் ஒரு நல்ல வருமானத்தை என்னால் சம்பாதிக்க முடிகிறது. மேலும் கடந்த 10 வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடியதில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. முன்பெல்லாம் ஒரு இடத்திற்காக தீவிரமாக போராடுவேன். ஆனால் இப்போது அனுபவம் அடைந்துள்ள நான் நிறைய விஷயங்களை கடக்க பழகிக்கொண்டேன். நான் யாருடனும் போட்டி போட விரும்பவில்லை. சில விஷயங்களை துரத்துவதை நிறுத்தி விட்டேன். சிறப்பாக செயல்பட்டால் அனைத்தும் தானாகவே கிடைக்கும் என்பதை நான் நம்புகிறேன்.

- Advertisement -

டெல்லி அணிக்காக நான் மிக சிறப்பாக செயல்பட்டு கடந்த வருடம் அதிக ரன்கள் அடித்த போதிலும் அவர்கள் என்னை தக்கவைக்கவில்லை. எனவே அதைப் பற்றி எதிர்மறையாக நினைக்காமல் நல்லதே நடக்கும் என நம்புவதால் எனது வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது” என இது பற்றி ஷிகர் தவான் மேலும் கூறினார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் இருந்து ஒதுக்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு – விருது வழங்கி கௌரவித்த வெளிநாடு

அவர் கூறுவது போல கடந்த சில வருடங்களாக டெல்லி அணிக்கு அதிரடியாக விளையாடிய தவான் 500க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்தார். குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த போதிலும் அந்த அணி அவரை தக்கவைக்க வில்லை. ஆனால் அதற்காக கவலைப் படாமல் வழக்கம்போல விளையாடி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிக்க உள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Advertisement