நோ சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் – தமிழக வீரருக்கு இடம், கெளதம் கம்பீர் வெளியிட்ட 2023 உ.கோ இந்திய அணி இதோ

Gautam gambhir 55
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக விளையாட உள்ளன.

அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் 2011 போல ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த நிலையில் இத்தொடருக்கு அனைத்து நாடுகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஐசிசி விதித்துள்ளது.

- Advertisement -

கம்பீரின் அணி:
ஆனால் இதுவரை உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் கேஎல் ராகுல் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் களமிறங்கும் தம்முடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

அந்த அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை தம்முடைய டாப் 3 பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்துள்ள கௌதம் கம்பீர் 4வது இடத்தில் ஆச்சரியப்படும் வகையில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட்டு ஒருநாள் போட்டிகளில் இன்னும் வெற்றிகரமாக செயல்படாத சூரியகுமார் யதாவை தேர்வு செய்துள்ளார். ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறுவதுடன் காயத்திலிருந்து குணமடைந்து ஆசியக் கோப்பையில் அசத்த தவறியதால் ஸ்ரேயாஸ் ஐயரை நம்பர் தேர்வு செய்யவில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுலை தேர்வு செய்து மற்றொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ள அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய இஷான் கிஷானையும் விடாமல் சேர்த்துள்ளார். அதே போல ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள அவர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்து மற்றொரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். ஏனெனில் ஆசிய கோப்பையில் தேர்வாகாத வாஷிங்டன் சுந்தர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்காக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : நீங்கல்லாம் ஒரு ஜாம்பவானா? தோனி, கோலி ரசிகர்களிடம் மிகவும் கேவலமான காரியத்தை செய்த கம்பீர்

மேலும் பும்ரா, சிராஜ், ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோரை வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ள அவர் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவையும் அக்சர் பட்டேலையும் தேர்ந்தெடுத்துள்ளார். 2023 உலகக்கோப்பை தொடருக்காக கௌதம் கம்பீர் தேர்வு செய்த 15 பேர் கொண்ட இந்திய அணி இதோ:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், கேஎல் ராகுல், இசான் கிசான், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா

Advertisement