நீங்கல்லாம் ஒரு ஜாம்பவானா? தோனி, கோலி ரசிகர்களிடம் மிகவும் கேவலமான காரியத்தை செய்த கம்பீர்

Gautam gambhir 22
- Advertisement -

டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலக கோப்பை ஃபைனலில் 70க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து எம்எஸ் தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2011 உலக கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் அடித்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல ஐபிஎல் தொடரிலும் 2 கோப்பைகளை வென்று 3வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஓய்வுக்குப் பின் வருணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

அதற்கிடையே அரசியலில் குதித்து மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் ஒரு வீரராக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த அவர் ஒரு வர்ணனையாளராக யாருக்குமே பிடிக்காதவராகவே இருந்து வருகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக தம்முடைய கேரியரின் கடைசி காலங்களில் இளம் வீரர்களை வளர்ப்பதற்காக கழற்றி விட்ட தோனியை சமயம் கிடைக்கும் போதெல்லாம் கம்பீர் வம்படியாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

கேவலமான செயல்:
அதிலும் குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியை அனைவரும் சேர்ந்து தான் பெற்றுக் கொடுத்தோமே தவிர எம்எஸ் தோனி ஒற்றை கையில் பெற்றுக் கொடுக்கவில்லை என அவர் விமர்சிப்பதை கேட்டு கேட்டு ரசிகர்கள் புளித்துப் போய் விட்டார்கள் என்றே சொல்லலாம். அதே போல ஒரே மாநிலமாக இருந்தாலும் 2013 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்தும் இந்த வருட சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக நெஞ்சோடு நெஞ்சாக மோதாத குறையாக சண்டையில் ஈடுபட்டார்.

மேலும் விராட் கோலியை தொடர்ந்து விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள கம்பீர் 2023 ஆசிய கோப்பையில் ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக பேட்டிங் செய்ய தெரியவில்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி தோனி மற்றும் விராட் கோலிக்கு எதிராக நிறைய தேவையற்ற விமர்சனங்களை வைத்துள்ள அவர் மீது அவருடைய ரசிகர்கள் எப்போதுமே காட்டத்துடன் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ விளையாடிய போட்டிகளில் ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் இருந்த ரசிகர்கள் கூட விராட் கோலி, விராட் கோலி என்று கூச்சலிட்டு ஆலோசகராக அவருக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற வரும் நேபாளுக்கு எதிரான போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் மழை வந்ததால் பெவிலியனை நோக்கி போனில் பேசிக்கொண்டே நடந்து சென்றார்.

இதையும் படிங்க: IND vs NEP : பாகிஸ்தானை விட இந்தியா வீக் தான் போல. இதுலயே நல்லா தெரியுது – என்ன ஆகப்போகுதோ?

அந்த சமயத்தில் தோனி, கோலி என்று வேகமாக கூச்சலிட்டு ரசிகர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு கொஞ்சம் கூட கூசாமல் தம்முடைய நடுவிரலை காட்டி விட்டு கௌதம் கம்பீர் கூலாக போனில் பேசியவாரே சென்றார். அதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எல்லாம் ஒரு ஜாம்பவானா? என்று கேவலமான செயலை செய்த அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். அதே போல ரசிகர்களை மதிக்காத அவரை இனிமேல் வர்ணனையாளராக செயல்பட பிசிசிஐ அனுமதிக்கக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement