அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்.. 2012 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கேவை சாய்க்க போட்ட திட்டம் பற்றி பேசிய கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வதற்காக எம்.எஸ். தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அனைத்து 10 அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக கடந்த சில வருடங்களாக லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த அவர் தற்போது தமக்கு மிகவும் பிடித்த கொல்கத்தா அணிக்கு நகர்ந்துள்ளார். ஐபிஎல் துவங்கப்பட்ட போது தன்னுடைய சொந்த மாநிலமான டெல்லிக்கு விளையாடிய அவர் பின்னர் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

மன்னிப்பு கேட்டேன்:
அதில் 2010, 2011 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 கோப்பையை வென்ற எம்எஸ் தோனி தலைமையிலான சென்னையை 2012 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை சுவைக்க விடாமல் வீழ்த்திய கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டது. அத்துடன் 2014 சீசனில் கொல்கத்தாவுக்கு 2வது கோப்பையை வென்று கொடுத்த அவர் தோனி, ரோகித்தை தொடர்ந்து மூன்றாவது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான 2012 ஐபிஎல் ஃபைனலுக்கு முன்பாக லக்ஷ்மிபதி பாலாஜி காயத்தை சந்தித்ததால் பிரட் லீ’யை அணிக்குள் கொண்டு வருவதற்காக நல்ல ஃபார்மில் இருந்த பிரண்டன் மெக்கலத்தை நீக்கியதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதற்காக அவரிடம் மொத்த அணியினருக்கு முன்பாக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டதாக தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த ஃபைனலுக்கு கிளம்புவதற்கு முன்பாக மொத்த கொல்கத்தா அணிக்கு முன்பாகவும் நான் ப்ரெண்டன் மெக்கலத்திடம் மன்னிக்குமாறு சொன்னேன். குறிப்பாக உங்களுடைய நல்ல செயல்பாடுகளின் தாண்டி அணியின் கலவைக்காக ஃபிளேயிங் லெவலினிருந்து உங்களை நீக்க வேண்டியுள்ளதாக அவரிடம் சொன்னேன். அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் நான் மொத்த அணிக்கு முன்பாகவும் மன்னிப்பு கேட்பதற்கான தைரியத்தை கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க: அந்த 2 பேர்ல ஒருத்தர் வந்தாலும் சர்பராஸ் கானின் இடம் காலியாவது கன்பார்ம் – வெளியான தகவல்

“மன்னிப்பு கேட்பதில் தவறில்லை. அந்த வகையில் கேப்டன்ஷிப் என்பது பாராட்டுவது அல்லது உங்களுக்கு நீங்களே அமைதிப்படுத்துவது அல்லது பாராட்டுகளை பெறுவது என்பதை மட்டும் பொருத்ததல்ல. அது போல மன்னிப்பு கேட்பதும் அதனுடைய ஒரு அங்கமாகும். அது வேடிக்கையாக இருந்தாலும் அப்படித் தான் நீங்கள் ஒரு கேப்டனாக வளர்வீர்கள்” என்று கூறினார்.

Advertisement