- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிஎஸ்கே போனதும் 2024 வாக்குறுதியை மறந்து சஞ்சு சாம்சனை ஓரம்கட்டிய கம்பீர்.. ரசிகர்கள் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டு ஜிதேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு தரப்பு ரசிகர்களிடம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த சாம்சனுக்கு பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் மிரட்டலாக விளையாடிய சாம்சன் 3 சதங்கள் அடித்து சாதனைகள் படைத்தார். அதனால் ஒரு வழியாக சாம்சன் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அந்த அட்டகாசமான ஆட்டத்திற்கு கௌதம் கம்பீர் தமக்கு கொடுத்த ஆதரவே காரணம் என்று சாம்சன் தெரிவித்தார்.

- Advertisement -

சிஎஸ்கே போனதும்:

குறிப்பாக 21 முறை டக் அவுட்டாகும் வரை உன்னை நீக்க மாட்டேன் என்று கௌதம் கம்பீர் கொடுத்த வாக்குறுதியே தம்முடைய சிறந்த ஆட்டத்திற்கு காரணம் என்று சாம்சன் தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் திடீரென சுப்மன் கில்லை தேர்வுக்குழு துணைக் கேப்டனாக அறிவித்தது. அதனால் சாம்சன் விளையாடி வந்த ஓப்பனிங் இடத்தை கௌதம் கம்பீர் அவருக்கு வழங்கினார்.

அந்த வாய்ப்பில் இதுவரை சுப்மன் கில் சிறப்பாக விளையாடவில்லை என்றே சொல்லலாம். மறுபுறம் சாம்சன் அடித்த 3 சதங்களை மதித்த கௌதம் கம்பீர் அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

சாம்சனை முடித்த கம்பீர்:

இருப்பினும் தற்போது அவரை மொத்தமாக கழற்றி விட்டுள்ள கௌதம் கம்பீர் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு சென்றதும் 21 முறை டக் அவுட் வாக்குறுதியை மறந்து சாம்சனை கழற்றி விட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கௌதம் கம்பீரை விமர்சிக்கிறார்கள். ஏனெனில் ஒருவேளை கில் வருகையால் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு சாம்சன் பொருந்த மாட்டார் என்று கருதியிருந்தால் ஆசியக் கோப்பையிலேயே கழற்றி விட்டிருக்கலாமே? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதையும் படிங்க: ரன்ஸ் அடிக்கலனாலும் ஓப்பனாக பேசும் சூரியகுமாரிடம்.. இந்த நல்ல தலைமைப்பண்பு இருக்கு.. ஸ்டைன் பாராட்டு

அத்துடன் ஆசியக் கோப்பை முடிந்த பின்பே சாம்சனை டிரேடிங் முறையில் சிஎஸ்கே அணி வாங்கியது. அதனாலேயே தற்போது சிஎஸ்கே மற்றும் தோனி மீதான வன்மத்தில் சாம்சனை திடீரென கௌதம் கம்பீர் கழற்றி விடுவதாகவும் ரசிகர்கள் விமர்சிக்கிறார்கள். இந்திய அணியில் 2012க்குப்பின் கம்பீருக்கு அப்போதைய கேப்டன் தோனி வாய்ப்புகள் வழங்கவில்லை. ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே பலமுறை கம்பீர் தலைமையிலான கொல்கத்தாவை தோற்கடித்ததே வன்மத்திற்கு காரணமாக இருப்பதாக ரசிகர்கள் சொல்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -