ரன்ஸ் அடிக்கலனாலும் ஓப்பனாக பேசும் சூரியகுமாரிடம்.. இந்த நல்ல தலைமைப்பண்பு இருக்கு.. ஸ்டைன் பாராட்டு

Dale Steyn
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு 2 அணிகளும் தயாராகியுள்ளன.

முன்னதாக இந்திய அணிக்காக சூரியகுமார் யாதவ் தாமதமாக 30 வயதில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக விளையாடிய அவர் டி20 போட்டிகளில் எதிரணி எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறிய அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கப்பட்டார்.

- Advertisement -

ரன்ஸ் அடிக்கலனாலும்:

அதனால் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலித்து வருகிறது. இருப்பினும் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சூரியகுமார் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறார். இந்நிலையில் பேட்டிங்கில் சூரியகுமார் பெரிய ரன்கள் குவிக்காவிட்டாலும் இந்திய அணி வீரர்களிடம் வெளிப்படையாக பேசுவதாக ஜாம்பவான் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டன்ஷிப் அதிகாரத்தை வைத்துக்கொண்டு 3வது இடத்தில் மட்டும் விளையாடுவேன் என்று சொல்லாத சூரியகுமார் மற்ற வீரர்களுக்காக தன்னுடைய இடத்தையும் சூழ்நிலைக்கேற்ப மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில் இந்திய அணியில் அனைவரும் விரும்பும் கேப்டனாக சூரியகுமார் இருப்பது பற்றி ஸ்டைன் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு அணியின் ஆதரவு இருந்தால் நீங்கள் கச்சிதமான சூழ்நிலையில் இருப்பதாக உணர்வீர்கள்”

- Advertisement -

விருப்பமான கேப்டன்:

“உங்களுடைய வீரர்களிடம் நீங்கள் வெளிப்படையாக பேசுவீர்கள். நீங்கள் உங்களுடைய இடம் அல்லது கேப்டன்ஷிப் பொறுப்பால் அச்சுறுத்தப்பட மாட்டீர்கள். எப்போதும் அணியை முன்னிலைப்படுத்தும் நீங்கள் வீரர்கள் மற்றும் அணிக்கு எது சிறந்தது? என்று பார்க்கிறீர்கள். அப்படிப்பட்ட கேப்டனை தான் அனைவரும் விரும்புவார்கள். அனைவரையும் வரவேற்கும் சூரியகுமார் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பது சிறந்தது”

இதையும் படிங்க: எனக்காக ரோஹித் ரிஸ்க் எடுத்தாரு.. கோலி என்னை வழி நடத்தினாரு.. சீனியர்கள் குறித்து – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டி

“ஒரு போட்டிக்காக மட்டும் மாற்றம் செய்தாலும், அது வளைவுத் தன்மையை உருவாக்கி உங்களுடைய வீரர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது. எனவே சூரியகுமார் தன்னுடைய ஒரு வீரரிடம் “இன்று நீங்கள் 3வது இடத்தில் விளையாடுங்கள் நான் 6இல் விளையாடுகிறேன்” என்று சொன்னால் அதை அவர் புரிந்து கொள்வார்கள். ஏனெனில் நமது கேப்டன் இதற்கு முன் ஆதரவளித்துள்ளார் என்பது அவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட விஷயம் சிறந்த தலைமைப் பண்பாகும்” என்று கூறினார்.

Advertisement