இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரருமான சுப்மன் கில் காயமடைந்ததன் காரணமாக மாற்று துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமாக முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக விளையாடியிருந்தார்.
ரோஹித் மற்றும் கோலி ஆகியோருடன் விளையாடியது மகிழ்ச்சி : யாஷஸ்வி ஜெய்ஸ்வால்
அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரியளவில் ரன் குவிக்க தடுமாறிய அவர் மூன்றாவது போட்டியின் போது சதம் அடித்தது மட்டுமில்லாமல் இறுதிவரை விராட் கோலியுடன் களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் எவ்வாறு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடினேன் என்பது குறித்த சில கருத்துக்களை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒவ்வொரு முறையும் ரோஹித் பாய் அணியின் திட்டம் குறித்து எங்களிடம் பேசும் போது நிறைய திட்டுவார்.
அப்படி அவர் திட்டும்போது நிறைய அன்பும், பாசமும் கலந்து இருக்கும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரோஹித் பாய் திட்டவில்லை என்றால் தான் எங்களுக்கு ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்ற பதட்டம் இருக்கும். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இருந்தால் அணியின் சூழல் மிகச் சிறப்பாக இருக்கும்.
நான் முதல் 2 போட்டியிலும் ரன் குவிக்க தடுமாறிய வேளையில் மூன்றாவது போட்டியின் போது விளையாட வருகையில் ரோஹித் பாய் என்னிடம் வந்து நான் முதலில் ரிஸ்க் எடுத்து விளையாடுகிறேன். நீ பொறுமையாக விளையாடு என்று என்னை சமாதானப்படுத்தினார்.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ
அதோடு விராட் கோலி களத்தில் இருக்கும்போது எனக்கு அவ்வப்போது சில சின்ன சின்ன இலக்குகளை கொடுத்தார். அப்படி அவர் வழிகாட்டுதாலேயே பெரிய சதம் அடிக்க முடிந்தது அதுமட்டுமின்றி இறுதிவரை போட்டியை நின்று முடிக்குமாறு அவர் என்னை சிறப்பாக வழி நடத்தினார் என்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.



