CWC 2023 : கைகொடுத்த விராட் கோலி – நவீன்.. நெகிழ்ச்சியுடன் நேரலையில் வர்ணித்த கம்பீர்.. முக்கிய கோரிக்கை

naveen ul haq 4
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா புள்ளி பட்டியலில் 2வது வெற்றியை பதிவு செய்து 2வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 274 ரன்களை ரோகித் சர்மா 131, இஷான் கிசான் 47, விராட் கோலி 55*, ஸ்ரேயாஸ் 25* ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

அதை விட அப்போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் இணைந்த கைகளாக நண்பர்களாக ஒன்று சேர்ந்தது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் மற்றும் விராட் கோலி ஆகியோரிடையே சண்டை ஏற்பட்டது. அத்துடன் என்னுடைய அணி வீரரை சீண்டுவது என்னுடைய குடும்பத்தை சீண்டுவதற்கு சமம் என்று விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு கௌதம் கம்பீரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

வர்ணித்த கம்பீர்:
அத்துடன் வெளியேயும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழத்தை வைத்து நவீன் தொடர்ந்து விராட் கோலியை கிண்டலடித்து வந்தார். அதனால் அவரை பார்க்கும் போதெல்லாம் இந்திய ரசிகர்கள் கோலி கோலி என்று கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்ததை போலவே நேற்று விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் உச்சகட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் பகையை மறந்த விராட் கோலி அவரை கிண்டலடிக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கையசைத்து கேட்டுக்கொண்டார். அதனால் நெகிழ்ந்த நவீன் தாமாக சென்று கை கொடுத்ததை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட விராட் கோலியும் அவருடைய தோளில் தட்டிக் கொடுத்தார். அதை விட அந்த பொன்னான தருணத்தை கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் இந்தி வர்ணனையில் வர்ணித்தது மற்றுமொரு ஹைலைட்டாக இருந்தது.

- Advertisement -

அந்த தருணத்தில் கம்பீர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் காலத்தில் சண்டை போடலாம். களத்திற்கு வெளியே அல்ல. ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய அணிக்காகவும் மரியாதைக்காகவும் வெற்றிக்காகவும் சண்டை போடலாம். குறிப்பாக நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லது எவ்வளவு நல்ல வீரர் என்பது முக்கியமல்ல. ஏனெனில் எப்போதும் நீங்கள் முதலில் உங்களுடைய அணிக்காகவும் வெற்றிக்காகவும் சண்டை போடுகிறீர்கள்”

இதையும் படிங்க: IND vs AFG : நாங்க நெனச்சத எங்களால செய்ய முடியல. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – ஆப்கான் கேப்டன் பேட்டி

“அந்த வகையில் விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோரிடையே நடந்த சண்டை இந்த ஓவருக்கிடையே முடிந்தது. இந்த சமயத்தில் களத்தில் அல்லது சமூக வலைதளத்தில் எந்த வீரரையும் ரசிகர்கள் கிண்டலடித்து கேலி பேசக்கூடாது என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள் தங்களுடைய அணிக்காக முழு மூச்சுடன் விளையாடுகிறார்கள். அத்துடன் ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது நவீனை பொறுத்த வரை மிகப் பெரிய விஷயமாகும்” என்று கூறினார்.

Advertisement