IPL 2023 : ஆர்சிபி’யை குத்தி காட்டினாரா? சிஎஸ்கே வெற்றியை வேற லெவலில் பாராட்டிய கௌதம் கம்பீர் – ரசிகர்கள் வியப்பு

Gambhir-and-Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த 2 மாதமாக பரபரப்பான போட்டிகளை விருந்தாக படைத்து வந்த ஐபிஎல் டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி துவங்கிய இத்தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் முடிவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய குஜராத்தை அதன் சொந்த மண்ணில் மாபெரும் ஃபைனலில் எதிர்கொண்ட சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 214/4 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக சுப்மன் கில் 39 (20) ரன்களும் சஹா 54 (39) ரன்களும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
இருப்பினும் கடைசி ஓவரில் மோஹித் சர்மா சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடியதால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியையும் பறக்க விட்ட ரவீந்திர ஜடேஜா 15* (9) ரன்கள் அடித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் அதிகபட்சமாக மோகித் சர்மா 3 விக்கெட்டுகளை எடுத்தும் தங்களது கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை குஜராத் நல்லது விட்டது. மறுபுறம் 2010, 2011, 2018, 2021 ஆகிய வருடங்களில் ஏற்கனவே 4 கோப்பைகளை வென்ற சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

அதன் வாயிலாக 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையின் ஆல் டைம் சாதனையையும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சமன் செய்து அசத்தியுள்ளது. அதனால் ஏராளமான ரசிகர்களும் கிரிக்கெட்டை தாண்டிய பிரபலங்களும் சென்னைக்கு மனதார வாழ்த்து தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ள வாழ்த்து அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வாழ்த்துக்கள் சிஎஸ்கே. ஒரு சாம்பியன் பட்டம் வெல்வதே மிகவும் கடினம். அந்த நிலையில் 5 பட்டங்களை வெல்வது நம்ப முடியாதது” என்று பாராட்டியுள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான தரத்தை கொண்ட ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு போன்ற அணிகள் 15 வருடங்கள் கடந்து இன்னும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறுகின்றன. போதாக்குறைக்கு கடந்த வருடத்திலிருந்து 2 அணிகள் எக்ஸ்ட்ரா சேர்க்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே போதும் போதும் என்றாகி விடுகிறது.

அந்தளவுக்கு அழுத்தமான தரமான ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை சென்னை வென்றுள்ளது நம்ப முடியாதது என கொல்கத்தாவுக்காக 2012, 2014 ஆகிய வருடங்களில் 2 கோப்பைகளை வென்று தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் 3வது வெற்றிகரமான கேப்டனாக இப்போதும் சாதனை படைத்துள்ள கௌதம் கம்பீர் அந்த வெற்றியின் அருமையை உணர்ந்து வெளிப்படையாக பாராட்டியுள்ளார். ஆனால் 2011 உலக கோப்பை ஃபைனலில் ஃபினிஷிங் செய்ததற்காக ஆட்டநாயகன் விருதை வென்றதாலும் கேரியரின் கடைசியில் போதிய வாய்ப்பு கொடுக்காததாலும் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக அவர் தொடர்ந்து தோனியை விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : ரோஹித்தால் நெருங்க முடியாது – கேப்டனாக மிஸ்பாவின் சாதனையை உடைத்த தல தோனி – புதிய உலக சாதனை

அந்த நிலையில் இதே தொடரில் அவர் ஆலோசகராக செயல்பட்ட லக்னோ பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறிய நிலையில் தோனி தலைமையிலான சென்னையை இப்படி பாராட்டியதை பார்க்கும் ரசிகர்கள் நீங்களா இது என்று வியப்பை வெளிப்படுத்துகின்றனர்.  அதே சமயம் இந்த தொடரில் விராட் கோலியுடன் சண்டை போட்டதால் ஒரு கோப்பையை கூட பெங்களூருவை அவர் புத்தி காட்டியதாகவும் ரசிகர்கள் பேசுகின்றனர்.

Advertisement