IPL 2023 : வரலாற்றில் தோனியையே பயமுறுத்தி மிரட்டிய பெருமை அவரை மட்டுமே சேரும் – இர்பான் பதான் அதிரடி பேட்டி

pathan 1
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தலைநகர் டெல்லியில் பிறந்து ஒரே மாநிலத்திற்காக விளையாடி இந்தியாவுக்காகவும் 2011 உலகக்கோப்பை உட்பட பல போட்டிகளில் ஒன்றாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற போட்டிக்கு பின் நேருக்கு நேராக வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டது அனைவரையும் அதிருப்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக 2013இல் கொல்கத்தாவின் கேப்டனாக விராட் கோலியுடன் சண்டை போட்ட கௌதம் கம்பீர் ஓய்வுக்கு பின் வர்ணையாளராக தேவையின்றி விமர்சித்து வந்த நிலையில் தற்போது லக்னோவின் பயிற்சியாளராக 10 வருடங்களுக்கு கழித்தும் பகையை மறக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இதே சீசனில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வென்ற பின் பெங்களூரு ரசிகர்களை வாய் மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு கௌதம் கம்பீர் மிரட்டினார். அதற்கு திருப்பி கொடுக்கும் வகையிலேயே இந்த போட்டியில் லக்னோ ரசிகர்கள் மற்றும் நவீனுக்கு வெற்றி உறுதியான போது விராட் கோலி கொடுத்த பதிலடி கம்பீரை கோபப்படுத்தி சண்டையிட வைத்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

தோனியையே மிரட்டல்:
முன்னதாக 2007 மற்றும் 2011 டி20 உலக கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினாலும் கௌதம் கம்பீர் எப்போதுமே சில வன்மத்தை வைத்துக்கொண்டு செயல்படுபவராகவே ரசிகர்களால் அறியப்படுகிறார். குறிப்பாக இப்போதுள்ள அடுத்த தலைமுறை அணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக 2011 உலக கோப்பைக்கு பின் சேவாக், கம்பீர் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்ட தோனி தற்போதுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார்.

அப்போதிலிருந்தே அதிருப்தியில் இருந்து வரும் கம்பீர் வர்ணனையாளராக தேவையின்றி விமர்சிப்பதுடன் 2011 உலகக் கோப்பை சம்பந்தமான வார்த்தைகள் வரும் போதெல்லாம் தோனி ஒன்றும் தனி ஒருவனாக கோப்பையைக் வெல்லவில்லை என விமர்சித்து வன்மத்தை வெளிப்படுத்தி வருவதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் அனைவரும் நல்ல மதிப்பை வைத்து தரமான எதிரணி வீரராக கருதும் எம்எஸ் தோனியை ஐபிஎல் வரலாற்றின் சில தருணங்களில் கௌதம் கம்பீர் மட்டுமே பயமுறுத்தியுள்ளதாக முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த போது புனே அணிக்காக விளையாடிய தோனியை ஒரு போட்டியில் தன்னுடைய அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக கம்பீர் அச்சுறுத்தியதை குறிப்பிடும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியின் ஈகோவுடன் கொல்கத்தாவின் கேப்டனாக இருந்த போது கௌதம் கம்பீர் விளையாடியுள்ளார். அவர் ஒருவர் மட்டுமே வரலாற்றில் தோனியை வெற்றிகரமாக பயமுறுத்தி துரத்தியவர் என்றே சொல்லலாம். குறிப்பாக சுற்றிலும் ஃபீல்டர்களை நிறுத்தி அவர் தோனியை அச்சுறுத்தியதை சொல்கிறேன்” என்று கூறினார்.

அதாவது கடந்த 2016 ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டனாக விளையாடிய தோனி டாப் ஆர்டர் வீரர்களின் சொதப்பலால் 74/4 என தடுமாறிய தனது அணியை நங்கூரமாக நின்று காப்பாற்றுவதற்காக மெதுவாக பேட்டிங் செய்தார். அது போக அந்த சமயத்தில் சற்று ஃபார்மின்றி இருந்த அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாற்றமாக செயல்பட்டார். அதை நன்றாகவே தெரிந்த கௌதம் கம்பீர் மிகச்சிறந்த ஃபினிசராக கருதப்படும் தோனியை டெஸ்ட் போட்டியை போல சிங்கிள் கூட எடுக்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஃபீல்டர்களை நிற்க வைத்து சுழல் பந்து வீச்சாளர்களால் தாக்கினார்.

இதையும் படிங்க:SRH vs KKR : 3 டெத் ஓவர்களில் மாயாஜாலம் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி – ஹைதராபாத் வெற்றியை பறித்தது எப்படி

இப்போதும் தோனியை கலாய்க்க வேண்டுமெனில் அவரை வெறுப்பவர்கள் கம்பீர் அன்றைய நாளில் பயன்படுத்திய ஃபீல்டிங் செட்டப் புகைப்படத்தை தூக்கிக் கொண்டு வருவார்கள். அந்த வகையில் விராட் கோலியை போல வரலாற்றில் தோனியை மிரட்டிய ஒரே நபர் என்றால் அது கௌதம் கம்பீர் என்று இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement