- Advertisement -
இந்திய கிரிக்கெட்

500 ரன்ஸ் அடிச்சும் ஸ்ரேயாஸை கழற்றி விடப் பார்த்தது ஏன்? ஜெய்ஸ்வால் விடுவிக்கப்பட்டது ஏன்? கம்பீர் பதில்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. முன்னதாக அந்தத் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி முழங்காலில் காயத்தை சந்தித்ததால் ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அறிமுகமானார்.

அந்த வாய்ப்பில் அவர் பெரிய ரன்கள் எடுக்காத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக 59 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். அந்தப் போட்டியின் முடிவில் விராட் கோலி காயமடைந்ததாலேயே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் இல்லையென்றால் கிடைத்திருக்காது என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார். அதைக் கேட்டு சில முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீரை கடுமையாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

500 ரன்ஸ் அடிச்சும்:

ஏனெனில் 2023 உலகக்கோப்பையில் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அப்படிப்பட்ட அவரை பெஞ்சில் அமர வைத்து கழற்றி விடப் பார்க்கலாமா? என்று விமர்சனங்கள் எழுந்தன. இது ஒரு புறமிருக்க சாம்பியன்ஸ் டிராபியில் தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஸ்வால் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதும் சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விடும் எண்ணம் தமக்கு இல்லை என்று கௌதம் கம்பீர் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலை சோதிக்க விரும்பியதாலே முதல் போட்டியில் அவரை பெஞ்சில் அமர வைத்ததாகக் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருக்க மாட்டார். முதல் போட்டியில் நாங்கள் ஜெய்ஸ்வாலை சோதித்துப் பார்க்க விரும்பினோம்”

- Advertisement -

சோதனை முயற்சிகள்:

“குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நல்ல ஃபார்மில் இருந்த அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். ஜெய்ஸ்வால் போன்றவரை நீங்கள் ஒரு போட்டியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது என்பது எனக்குத் தெரியும். அதே சமயம் ஸ்ரேயாஸ் எங்களுடைய முக்கியமான வீரர் என்பதும் தெரியும். சில நேரங்களில் 3 போட்டிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய அணியில் இருக்கும் வீரர்களைச் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது”

இதையும் படிங்க: பும்ரா இல்லனா என்ன? 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ஜெயிக்க அந்த 2 தரமான பவுலர்கள் போதும்.. கம்பீர் நம்பிக்கை

“சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ள நிலையில் அந்த 3 போட்டிகளை நீங்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தி ஒவ்வொரு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்தோம். மற்ற படி ஸ்ரேயாஸ் எங்களுடைய திட்டங்களின் ஒரு அங்கமாக இருப்பதாலேயே 3 போட்டிகளிலும் விளையாடினார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதி சந்திக்கிறது.

- Advertisement -