- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பயமற்ற வெற்றிகரமான இந்தியா என் டீம் இல்ல.. எல்லாத்துக்கும் அவங்க 2 தான் பொறுப்பு.. கம்பீர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் 2024 முதல் செயல்பட்டு வருகிறார். ராகுல் டிராவிட் இடத்தில் பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.

ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் அவருடைய தலைமையில் இந்தியா தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் தோற்றது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

என்னோட டீம் இல்லை:

அதன் காரணமாக விராட், ரோஹித் உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கியது. அவருடைய தலைமையில் இங்கிலாந்தில் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா போராடி தொடரை சமன் செய்தது. இந்நிலையில் இந்தியா தம்முடைய அணி கிடையாது என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மாறாக கேப்டன்கள் சுப்மன் கில், சூரியகுமார் ஆகியோர் முக்கிய முடிவுகளை சுயமாக எடுத்து இந்திய அணியை பொறுப்புடன் முன்னோக்கி வழி நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் இப்போதும் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். அது அவருடைய டி20 அணி. என்னுடையது கிடையாது. அதே போல டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் சுப்மன் கில்லுடையது. என்னுடையது கிடையாது”

- Advertisement -

கேப்டன்களின் அணி:

“சூரியகுமாருடைய குணம் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் விரும்பக்கூடியதாக இருக்கும். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் சுதந்திரமாக செயல்படுவார். டி20 என்பது சுதந்திரத்தைப் பொறுத்தது. உங்களது குணத்தைப் போலவே அணியும் அமையும். அவருடைய தலைமையில் அதிக ரிஸ்க் எடுத்து அதிக பரிசை பெறும் கிரிக்கெட்டை இந்தியா விளையாடுகிறது. முதலில் நாம் தோற்பதற்கு பயப்படக்கூடாது என்று சூரியகுமாரிடம் பேசியுள்ளேன்”

இதையும் படிங்க: 79 ரன்ஸ்.. வெ.இ டெய்ல் எண்டரிடம் திணறிய இந்தியா.. நினைத்த வெற்றியை கோட்டை விட்ட பரிதாபம்

“நான் இந்தியாவின் வெற்றிகரமான பயிற்சியாளராக வர விரும்பவில்லை. மாறாக இந்தியாவை பயமற்ற வெற்றிகரமான அணியாக வர விரும்புகிறேன். பெரிய போட்டிகளில் பயமின்றி விளையாடுவது முக்கியம். அங்கே நாம் தவறு செய்ய பயப்படக்கூடாது. அதையே ஆசியக் கோப்பை ஃபைனலில் கடைபிடித்தோம். அங்கே ஒரு மோசமான கேட்ச், ஷாட் இருந்தால் பரவாயில்லை. அணியில் 30 பேர் இருந்தால் அவர்கள் ஒவ்வொரின் கருத்தும் முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -