பெயருக்காக இல்லாம நாட்டுக்காக ஆடும்.. இந்த 3 பிளேயர்ஸ் டெம்ப்ளேட் தான் நமக்கு வேணும்.. கம்பீர் பாராட்டு

Gautam Gambhir
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த தோல்வியால் இத்தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க கடைசி போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 6/2 என்ற மோசமான துவக்கத்தைப் பெற்று இந்தியா தடுமாறிய போது இளம் வீரர் திலக் வர்மா தம்முடைய விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடியாக 29 (20) ரன்கள் குவித்து சரிவை சரி செய்து அவுட்டானார்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
அப்போது வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் களமிறங்கியிருந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் தமது ஸ்டைலில் அதிரடியாக விளையாடி 56 (36) ரன்கள் குவித்தார். இறுதியில் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 68* (39) ரன்கள் குவித்த ரிங்கு சிங் 19.3 ஓவரில் இந்தியா 180/7 என்ற நல்ல ரன்களை குவிக்க உதவினார்.

இந்நிலையில் அப்போட்டியில் திலக் வர்மா, சூரியகுமார், ரிங்கு சிங் ஆகியோர் பெயருக்காக அல்லாமல் அணிக்காக விளையாடியதாக கௌதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதை விட இப்படி அணியின் நலனுக்காக விளையாடக்கூடிய வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அதிரடியாக விளையாடக் கூடிய பாதையில் இந்திய பயணிக்க முடியும் என்று பாராட்டிய அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உங்களுடைய பெயருக்காக அல்லது பணத்திற்காக விளையாடாதது போல் இப்போட்டியில் திலக் வர்மா பேட்டிங் செய்தார். இங்கே எத்தனை அணிகள் துவக்க வீரர்கள் இருவருமே ரன்கள் எடுக்காத போதிலும் கடைசியில் 180 ரன்களை எடுத்தன? இந்த போட்டியில் நம்முடைய 3, 4, 5 ஆகிய இடங்களில் விளையாடிய வீரர்கள் அட்டாக் செய்து சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்”

இதையும் படிங்க: இந்தியா – தெ.ஆ 2வது நடைபெறும் வாண்ட்ரர்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“இதை நீங்கள் பயமின்றி பேட்டிங் செய்தால் மட்டுமே சாதிக்க முடியும். அந்த மனநலமையில் தான் உங்களால் பந்தை மட்டும் பார்த்து அடிக்க முடியும். எனவே அனுபவத்துடன் பயமின்றி விளையாடக்கூடிய இளம் வீரர்களை கொண்ட அணி தான் உண்மையிலேயே நல்ல அணியாகும். ஒருவேளை நீங்கள் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை கொடுத்தால் இதே போன்ற டெம்ப்ளேட்டை உங்களால் விளையாட முடியும்” என்று கூறினார்.

Advertisement