இந்தியா – தெ.ஆ 2வது நடைபெறும் வாண்ட்ரர்ஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Wanderers Stadium
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கு தயாராகும் பயணத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி வென்றது. அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்றது.

அதனால் பின்னடைவை சந்தித்துள்ள இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் 2வது போட்டியில் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்த போதிலும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. எனவே அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு 3வது போட்டியை வென்று தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க இந்திய அணி போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

வாண்ட்ரர்ஸ் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி டிசம்பர் 14ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்ட்ரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 1956இல் தோற்றுவிக்கப்பட்டு 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன சதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2005 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இங்கு வரலாற்றில் நடைபெற்ற 32 டி20 போட்டிகளில் 24 முறை விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 14 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் சந்தித்துள்ளது. மறுபுறம் 2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஃபைனல் உட்பட இங்கு விளையாடிய 5 போட்டிகளில் இந்தியா 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக தென்னாபிரிக்காவை எதிர்கொண்ட 3 போட்டிகளில் இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (175) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (75) குவித்த இந்திய வீரராக கௌதம் கம்பீரும் சிறந்த பவுலிங் (5/24) மற்றும் அதிக விக்கெட்களை (5) எடுத்த இந்திய பவுலராக புவனேஸ்வர் குமாரும் சாதனை படைத்துள்ளனர். இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 203/5, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2018

வெதர் ரிப்போர்ட்:
ஜோஹன்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 14ஆம் தேதி மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
வாண்ட்ரர்ஸ் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு சாதகமானதாக இருந்து. எனவே நன்றாக செட்டிலாகி விளையாடும் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக இங்கே பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே சமயம் சமீபத்திய நாட்களில் இங்கு மழை பெய்ததால் போட்டி நாளன்று பிட்ச் பவுலர்களுக்கும் கை கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அம்பயர் கொடுத்த தவறான முடிவு.. நடையை கட்ட தயாரான ரிங்கு.. தடுத்து நிறுத்தி சாதிக்க வைத்த சூரியகுமார் – நடந்தது என்ன?

வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் முடிவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 173 ரன்களாகும். இங்கு நடைபெற்ற 32 போட்டிகளில் 15 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 17 முறை சேர்த்தும் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement