ரோஹித் சர்மா 5 கப் வாங்கிருக்காரு.. ஆனா நீங்க என்ன சாதிச்சீங்க? சந்தடி சாக்கில் விராட் கோலி மீது பாய்ந்த கெளதம் கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஆசிய கோப்பை 2023 தொடரை வென்ற இந்தியா ஆசிய கண்டத்தின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

அதே போல 2 ஆசிய கோப்பைகளை (2018, 2023*) வென்ற இந்திய கேப்டன் என்ற முகமது அசாருதீன் மற்றும் எம்எஸ் தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் சர்ச்சைக்குரிய முறையில் விராட் கோலி பதவி விலகிய பின் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பாய்ந்த கம்பீர்:
மேலும் சமீப காலங்களில் சுமாரான ஃபிட்னஸ் கடைப்பிடிக்கும் அவர் பேட்டிங்கிலும் தடுமாறியதால் இதற்கு பேசாமல் விராட் கோலியே கேப்டனாக இருந்திருக்கலாம் என்று நிறைய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ரோகித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

மேலும் ஆசிய கோப்பையை வென்ற ரோகித் சர்மாவுக்கு 2023 உலகக் கோப்பையில் தான் உண்மையான சோதனை காத்திருப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் எப்போதும் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவர் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வென்றதில்லை”

- Advertisement -

“இருப்பினும் ரோகத்துக்கு உண்மையான சோதனை 15 நாட்களில் காத்திருக்கிறது. ஏனெனில் உங்களிடம் தற்போது இந்திய அணியில் 15 – 18 சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோப்பையை வெல்ல முடியாமல் போனால் உங்கள் மீது கேள்விகள் எழும். பொதுவாக ஒவ்வொரு உலகக் கோப்பை முடிந்த பின்பும் அதை வெல்ல முடியாவிட்டால் கேப்டன் மீது கேள்விகள் வரும். அதை விராட் கோலியும் சந்தித்தார்”

இதையும் படிங்க: இந்த ட்விஸ்டை எதிர்பாக்கல.. அந்த தொடரில் இந்தியா தான் யாருலும் நெருங்க முடியாத டேஞ்சரான டீமா இருப்பாங்க – சோயப் அக்தர் யூடர்ன்

“2007இல் ராகுல் டிராவிட்டும் கேள்விகளை சந்தித்தார். அதே போல 2023 உலக கோப்பையை இந்தியா வெல்ல முடியாவிட்டால் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் மீது அதிகமான கேள்விகள் வரும். இருப்பினும் இந்த அணி உலகக் கோப்பை ஃபைனலுக்கு செல்லும் அளவுக்கு தகுதி உடையதாக இருக்கிறது” என்று கூறினார். இப்படி தோனி முதல் விராட் கோலி வரை தாறுமாறாக கௌதம் கம்பீர் விமர்சிப்பது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement