விராட் கோலியை பாத்தா உங்களுக்கெல்லாம் ஜோக்கா இருக்கா? ரசிகர்கள் வியக்கும் வகையில் பாராட்டிய கம்பீர் – காரணம் இதோ

Gambhir
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை 99% உறுதி செய்துள்ளது. மேலும் 2 போட்டிகளிலுமே உலகின் நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலியாவை முதல் 3 நாட்களுக்குள் அசால்டாக சுருட்டிய இந்தியா 2017, 2018/19, 2020/21, 2023* என 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை தொடர்ந்து வென்ற முதல் அணியாகவும் சாதனை படைத்துள்ளது.

Virat Kohli DRS

முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு கடந்த வருடம் ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 4 சதங்களை அடித்து விட்ட நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் அடுத்த சதத்தை பதிவு செய்யாமல் தடுமாறி வருகிறார். அந்த நிலையில் களமிறங்கிய அவர் தனது சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் சதமடிக்கவில்லை என்றாலும் 44, 20 என 2 இன்னிங்சிலும் நல்ல ரன்களை அடித்து இந்தியாவின் வெற்றியில் முடிந்தளவுக்கு பங்காற்றினார்.

- Advertisement -

ஜோக் இல்ல:
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் சர்ச்சைக்குரிய முறையில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட அவர் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் லென்த்தை சரியாகக் கணித்து அதற்கேற்றார் போல் மணிக்கட்டை சுழற்றி பேட்டிங் செய்த விதம் நிறைய முன்னாள் வீரர்களை பாராட்டுகளை பெற்றது. அதை விட சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 25,000 ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த அவர் தன்னை நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்பதை நிரூபித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறினாலும் குறுகிய காலத்திலேயே சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கிட்டத்தட்ட 50+ என்ற அற்புதமான பேட்டிங் சராசரியில் 74 சதங்களை அடித்து 25000+ ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் அதிவேகமாக 25,000 ரன்கள் அடிப்பது ஜோக் அல்ல என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். பொதுவாகவே சிறப்பாக செயல்பட்டு சாதனை படைக்கும் போதெல்லாம் பெயருக்காக விளையாடாமல் நாட்டுக்காக விளையாடுங்கள் என்று விராட் கோலியை சமீப காலங்களாகவே விமர்சித்த அவர் தற்போது ரசிகர்கள் வியக்கும் வகையில் பாராட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

Gambhir

“அந்த சாதனையை பட்டியல் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்தியாவில் செயல்பட்டது போலவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட்டது தான் விராட் கோலியின் சிறந்த பகுதியாகும். அந்தப் பட்டியலில் சில ஆஸ்திரேலியர்களும் தென்னாபிரிக்கர்களும் இருக்கலாம். ஆனால் அந்த வெளிநாட்டு வீரர்கள் இந்திய துணை கண்டத்தில் எவ்வளவு புள்ளி விவரங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி மாஸ்டர். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் 27 சதங்களையும் 28 அரை சதங்களையும் அடித்துள்ளார்”

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த பட் கமின்ஸ் 1466 நாட்கள் ராஜாங்கம், அஷ்வினுக்கு டாட்டா காட்டி 86 வருட புதிய வரலாறு படைத்த ஆண்டர்சன்

“மேலும் அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளிலும் சதமடித்துள்ளார். இன்னும் ஒருவர் என்ன சாதிக்க வேண்டும்? எனவே 25000 ரன்கள் அடிப்பது ஜோக் அல்ல. அதற்கு முன்பாக நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தும் அவர் தொடர்ச்சியாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த காலகட்டங்களில் உங்களுடைய ஸ்டேன்ஸ், டெக்னிக், பலம், பலவீனம், அவுட்டாகும் விதம், உணர்வுகள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இவை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவ்வளவு ரன்களை அடிக்கிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சிறந்தவர்” என்று பாராட்டி பேசினார்.

Advertisement