நேரலையில் கில்லை தேர்வு செய்த வாட்சன், யூனிஸ்.. வன்மத்துடன் வெளிநாட்டு வீரரை தேர்ந்தெடுத்த கம்பீர்

Gautam Gambhir 10
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி துவங்குகிறது. அதன் காரணமாக இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு செமி ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் டாப் 4 அணிகள் எது, கோப்பையை வெல்லப் போவது யார், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்து சாதனைகளை படைக்கப் போவது யார் என்பது போன்றவற்றை முன்னாள் வீரர்கள் விவாதித்து வருகின்றனர்.

அதில் செமி ஃபைனலுக்கு டாப் 4 அணிகளில் சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இருக்கும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். அதே போல அதிக ரன்கள் அடிப்பப்பவர்களாக இந்தியாவின் விராட் கோலி, சுப்மன் கில், பாபர் அசாம் போன்றவர்கள் இருப்பார்கள் என ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

கம்பீரின் கணிப்பு:
அந்த வரிசையில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கும் வீரராக யார் இருப்பார் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நிறைய முன்னாள் வீரர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் பப் டு பிளேஸிஸ் மற்றும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி என்று பதிலளித்தனர்.

அதையும் மிஞ்சும் அளவுக்கு ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகிய 4 முன்னாள் நட்சத்திரங்கள் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் அதிக ரன்கள் குவிப்பவராக இருப்பார் என்று தங்களுடைய கணிப்பை தெரிவித்தனர். அதில் சற்று மாறுபட்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் டாமினி கோர்க் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவையும் டேல் ஸ்டைன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமையும் தேர்ந்தெடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அந்த முன்னாள் வீரர்களுக்கு மத்தியில் இருந்த கௌதம் கம்பீர் கொஞ்சம் கூட சம்பந்தமின்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தான் டாப் ரன் அடிப்பவராக இருப்பார் என்று வித்தியாசமான கணிப்பை வெளியிட்டார். ஏனெனில் பொதுவாகவே டாப் 3 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் தான் பெரிய ரன்கள் குவித்து அந்த சாதனை பட்டியலில் இடம் பிடிக்க முடியும்.

இதையும் படிங்க: ENG vs BAN : மொய்ன் அலி அதிரடி.. சேசிங்கில் 77 பந்துகள் மீதம்.. வங்கதேசத்தை அசல்ட்டாக மிரட்டிய இங்கிலாந்து

அந்த சூழ்நிலையில் தற்போது கேப்டனாக களமிறங்கும் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் நலனுக்காக இம்முறை 5வது இடத்தில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கையில் ரோகித், விராட், கில் ஆகிய இந்திய வீரர்களை தேர்வு செய்யாத கம்பீர் குடும்பத்துடன் அவரைத் தேர்ந்தெடுத்ததாக ரசிகர்கள் சாடுகின்றனர். ஏனெனில் ரோஹித், விராட் ஆகியோரை சிறப்பாக செயல்பட்டாலும் விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ள கம்பீர் இத்தொடரில் பாபர் அசாம் தான் அதிக சதங்கள் அடிப்பார் என்று ஏற்கனவே மற்றொரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement