ENG vs BAN : மொய்ன் அலி அதிரடி.. சேசிங்கில் 77 பந்துகள் மீதம்.. வங்கதேசத்தை அசல்ட்டாக மிரட்டிய இங்கிலாந்து

Moeen ALi
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் பயிற்சி அக்டோபர் 2ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற 6வது போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை கத்துக்குட்டி வங்கதேசம் எதிர்கொண்டது. இந்த மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து மோதிய போட்டி உட்பட ஏற்கனவே நடைபெற்ற முதலிரண்டு பயிற்சி போட்டிகள் மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன.

அந்த சூழ்நிலையில் இந்த போட்டியிலும் வந்த மழை கொஞ்சம் கருணை காட்டி சென்றதால் 37 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 37 ஓவரில் 188/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியிலும் கேப்டன் ஷாகிப் அல் ஹஸன் களமிறங்காத நிலையில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 74, டன்சிட் ஹசன் 45 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

எளிதான வெற்றி:
மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 4 விக்கெட்டுகளையும் அடில் ரசித் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 189 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு டேவிட் மாலனை முதல் ஓவரிலேயே 4 ரன்களில் காலி செய்த நட்சத்திர பவுலர் முஸ்தபிர் ரகுமான் மறுபுறம் அதிரடி காட்ட முயற்சித்த ஜானி பேர்ஸ்டோவையும் 34 (21) ரன்களில் போல்டாக்கினார்.

அடுத்த சில ஓவர்களிலேயே இளம் வீரர் ஹாரி ப்ரூக் 17 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ஜோர்ரூட் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அந்த சூழ்நிலையில் களமிறங்கிய கேப்டன் ஜோஸ் பட்லர் சரவெடியாக விளையாடி 30 (15) ரன்கள் குவித்து தம்முடைய வேலையை செய்து பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும் அடுத்ததாக வந்த மொய்ன் அலி தம்முடைய ஸ்டைலில் வங்கதேச பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தார். குறிப்பாக 2 பவுண்டரியை மட்டுமே அடித்த அவர் 6 சிக்சரை பறக்கவிட்டு அதிரடியாக 56 (39) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அதன் காரணமாக எதிர்ப்புறம் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டை போல மெதுவாக 26* (40) ரன்கள் எடுத்த போதிலும் 24.1 ஓவரிலேயே 197/6 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இதையும் படிங்க: NZ vs SA : பயிற்சி போட்டியிலேயே நிகழ்ந்த பரிதாபம்.. DLS காரணமாக வெற்றி கை மாறியது எப்படி

அந்த வகையில் முஸ்தபிசூர் ரகுமான் 2 விக்கெட் எடுத்தும் வங்கதேசம் தோற்றது. மறுபுறம் தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபிக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்களில் கத்துக்குட்டி வங்கதேசம் கொடுத்த இலக்கை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 12.5 ஓவர்கள் மீதம் வைத்து மிரட்டலான சேசிங் செய்து மழையையும் தாண்டி எளிதான வெற்றி பெற்றது.

Advertisement